காதுக்குள்ள ஓடிட்டே இருக்கும்.. ஆட்டோ நாய்ஸ் கேன்சலேஷன்.. 360 ரியாலிட்டி ஆடியோ.. ஹெட் டிராக்கிங்.. எந்த மாடல்?
வாங்குனா இப்படிவொரு இயர்பட்ஸ் வாங்கனும் என்று அடித்து சொல்லும்படி அல்ட்ரா பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் சோனி லிங்க்பட்ஸ் ஃபிட் (Sony LinkBuds Fit) மாடலானது இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ஆட்டோ நாய்ஸ் கேன்சலேஷன் ஆப்டிமைசர், ஆம்பியன்ட் சவுண்ட் மோட், அடாப்டிவ் சவுண்ட் கன்ட்ரோல், ஏஐ நாய்ஸ் ரெடக்சன், 360 ரியாலிட்டி ஆடியோ, கூகுள் அசிஸ்டன்ட், ஃபாஸ்ட் ஃபேர் மற்றும் 21 மணி நேர பிளேபேக் கொண்ட பேட்டரி போன்ற பீச்சர்களை இந்த சோனி இயர்பட்ஸ் கொடுக்கிறது.
பிரீமியம் இயர்பட்ஸ் வாங்க திட்டமிட்ட பிரியர்களுக்கு மட்டுமே இந்த சோனி லிங்க்பட்ஸ் ஃபிட் மாடல் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், விலை ரூ. 18,990ஆக இருக்கிறது. இவ்வளவு விலைக்கு வெளியானாலும் அதற்கு ஏற்ப பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பீச்சர்களை பார்த்துவிட்டு, அது வொர்த்தா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சோனி லிங்க்பட்ஸ் ஃபிட் அம்சங்கள் (Sony LinkBuds Fit Specifications): பிரீமியம் மாடலாக இருப்பதால் காதுகளுக்கு அசவுகரியம் ஏற்படாமல் இருக்க 4.9 கிராம் எடையில் இயர்பட்கள் கிடைக்கின்றன. 4 சைஸ்களில் இயர்பட் டிப்ஸ் கிடைக்கிறது. அதேபோல உடற்பயிற்சி செய்யும்போது இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கு காம்பாக்ட் மற்றும் கம்போர்ட் டிசைன் கொடுக்கிறது.
இதற்கு ஏற்ப ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி IPX4 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, 10 மீட்டர்கள் ரேஞ்ச் மட்டுமல்லாமல், எஸ்பிசி (SBC), ஏஏசி (AAC), எல்டிஏசி (LDAC) மற்றும் எல்சி3 (LC3) கோடாக் சப்போர்ட் கொடுக்கிறது. நாய்ஸ் கேன்சலேஷன் பிரீமியமாக கிடைக்கிறது.
அதாவது, ஆட்டோ நாய்ஸ் கேன்சலேஷன் ஆப்டிமைசர் (Auto Noise Cancellation Optimizer) கிடைக்கிறது. இதுபோக ஆம்பியன் சவுண்ட் மோட் (Ambient Sound Mode) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் கன்ட்ரோல் (Adaptive Sound Control) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஆட்டோமெட்டிக் கன்ட்ரோலுடன் ஆடியோ குவாலிட்டி அல்ட்ரா பிரீமியம் மற்றும் நாய்ஸ் இல்லாமல் இருக்கும்.
அதேபோல வாய்ல் கால்களுக்கும் ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்காக வாய்ஸ் சவுண்ட் சாம்பிள் ப்ராஸசஸ் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அவுட்டோர் நாய்ஸை டிடெக்ட் செய்து ஆட்டோ கன்ட்ரோல் செய்யும். இதன் மூலம் அல்ட்ரா கிளியர் வாய்ஸ் கால்கள் அவுட்புட் கிடைக்கும். ஆடியோ பீச்சர்களும் பிரீமியமாக இருக்கின்றன.
ஆகவே, எல்டிஏசி ஹை-ரெஸ் ஆடியோ (LDAC Hi-Res Audio) மற்றும் சோனி நிறுவனத்தின் 360 ரியாலிட்டி ஆடியோ (360 Reality Audio) கிடைக்கிறது. இந்த ரியலிட்டி ஆடியோ மூலம் ஸ்பாஷியல் ஆடியோ அனுபவம் அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம். இதுபோக ஹெட் டிராக்கிங் (Head Tracking) கிடைக்கிறது. ஆகவே, ஹெட் மூவ்மெண்ட்களுக்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கும்.
கன்ட்ரோல்களை பொறுத்தவரையில், வழக்கமான டேப் கன்ட்ரோல் மட்டுமல்லாமல், ஹெட் கெஸ்ச்சர் (Head Gestures), வியர் டிடெக்சன் (Wear Detection) மற்றும் ஸ்பீச்-டூ-சாட் (Speech-to-Chat) கன்ட்ரோல்கள் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மட்டுமல்லாமல், அலெக்சா (Alexa) சப்போர்ட்டும் கிடைக்கிறது.
கூகுள் ஃபாஸ்ட் பேர், மல்டி பாய்ன்ட் கனெக்டிவிட்டி, ஆட்டோ பிளே போன்ற ஸ்மார்ட் பீச்சர்கள் கிடைக்கின்றன. 21 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். நாய்ஸ் கேன்சலேஷனில் பயன்படுத்தினால், 5.5 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 1 மணி நேரத்துக்கு பேக்கப் கிடைக்கும்.
பட்களை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்களும், சார்ஜிங் கேஸை ஃபுல் சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களுக்கும் தேவைப்படும். இந்த சோனி லிங்க்பட்ஸ் ஃபிட் (WF-LS910N) மாடலின் விலை ரூ.18,990 ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்100 (Sony SRS-XB100) போர்டபிள் ஸ்பீக்கர் இலவசமாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








