செஞ்சிட்டான் SONY.. மற்ற Buds-லாம் பறந்துபோ.. 37 மணி நேர பேட்டரி, IPX4 உடன் புது Clip டிசைன் பட்ஸ் அறிமுகம்!
சோனி (SONY) நிறுவனம், இந்த ஆண்டு ஜனவரியில் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்கு பிறகு, அதன் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் மாடல் ஆன சோனி லிங்க்பட்ஸ் கிளிப் ஓப்பன்-இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை (Sony LinkBuds Clip open-ear true wireless earbuds) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சோனியின் இந்த புதிய இயர்பட்ஸ், காது குழாய்க்கு தடையின்றி இருக்கும் அதே வேளையில், பயனர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை கேட்க அனுமதிக்கும் ஓப்பன்-இயர் கிளிப் வடிவமைப்பை பெற்றுள்ளன. மேலும், சோனி நிறுவனம் ஆனது அதன் லிங்க்பட்ஸ் கிளிப்பில் ஏஐ (AI) உதவியுடன் கூடிய வாய்ஸ் ப்ராஸஸிங், மூன்று லிஸனிங் முறைகள், ப்ளூடூத் மல்டிபாயிண்ட் ஆதரவு மற்றும் 37 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப் ஆகியவற்றையும் வழங்கியுள்ளது.

அம்சங்கள்: சோனி லிங்க்பட்ஸ் கிளிப் ஆனது காது குழாயை மறைக்காத வகையில் வடிவமைக்கப்பட்ட ஓப்பன்-இயர் கிளிப்-ஸ்டைல் அமைப்பை கொண்டுள்ளது. இதனால், பயன்படுத்தும் போது வெளிப்புற ஒலிகள் தொடர்ந்து கேட்கும். இந்த இயர்பட்ஸ் நீண்ட நேரம் அணிவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக சோனி கூறுகிறது. மேலும், இதனுடன் வரும் பொருத்தமான குஷன்கள், வெவ்வேறு காது வடிவங்களுக்கு ஏற்ப நிலைத்தன்மையையும் வசதியையும் மேம்படுத்த உதவுகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், ஒலி கசிவை குறைக்கும் வகையிலும் இதன் கவர் வடிவமைக்கப்பட்டுள்ளது. வியர்வை மற்றும் நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்காக, இவை IPX4 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன. ஒலியைபொறுத்தவரை, லிங்க்பட்ஸ் கிளிப் 10மிமீ டிரைவர்களுடன் வருகிறது மற்றும் SBC, AAC புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கிறது.
காம்ப்ரஸ்டு ஆடியோவை இயக்கும்போது, இழக்கப்படும் நுணுக்கங்களை மீட்டெடுக்க, சோனியின் டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் இன்ஜின் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் சோனி சவுண்ட் கனெக்ட் ஆப் மூலம் 10-பேண்ட் ஈக்வலைசரை பயன்படுத்தி சவுண்ட் ப்ரோபைலை கஸ்டமைஸ் செய்யலாம். இந்த இயர்பட்ஸ் 360 ரியாலிட்டி ஆடியோ மற்றும் பேக்கிரவுண்ட் ம்யூசிக் எபெக்ட்டை ஆதரிக்கின்றன.
மேலும் இந்த சோனி இயர்பட்ஸ் ஆனது மூன்று லிஸனிங் ப்ரீசெட்களை வழங்குகின்றன. ஸ்டாண்டர்ட் மோட் ஆனது அன்றாட பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, வாய்ஸ் பூஸ்ட் ஆனது அழைப்புகள், பாட்காஸ்ட்கள் மற்றும் இசையில் பேச்சு தெளிவை மேம்படுத்துகிறது, அதே சமயம் சவுண்ட் லீக்கேஜ் ரிடக்ஷன் ஆனது உயர் அதிர்வெண் ஒலிகள் சுற்றியுள்ள பகுதிக்கு செல்வதைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடவே சோனி நிறுவனம் ஆனது நடைபயிற்சி, ஓட்டம் மற்றும் ஜிம் உடற்பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளின் அடிப்படையில் கேட்கும் அனுபவத்தை தானாகவே சரிசெய்யும் சீன்-பேஸ்டு லிசனிங்கையும் சேர்த்துள்ளது. வாய்ஸ் கால்களுக்கு, இது டூயல் க்ரோஃபோன்கள், Precise Voice Pickup தொழில்நுட்பம், ஏஐ சார்ந்த சிக்னல் செயலாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சுற்றுப்புற இரைச்சலை குறைத்து பேசுபவரின் குரலை தெளிவாக பிரித்தெடுக்கிறது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது Bluetooth 5.3-ஐ கொண்டுள்ளது. இது 'மல்டிபாயிண்ட் பேரிங்' (multipoint pairing) வசதியை ஆதரிப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைந்திருக்க முடியும். பேட்டரியை பொறுத்தவரை, ஒரே சார்ஜில் ஒன்பது மணிநேரம் வரை இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது என்றும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 37 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் பை பெற முடியும் என்றும் சோனி நிறுவனம் கூறுகிறது. மூன்று நிமிட குவிக் சார்ஜிங் மூலம் ஒரு மணிநேரம் வரை கேட்கும் நேரத்தை பெற முடியும்.
விலை: இந்தியாவில் சோனி லிங்க்பட்ஸ் கிளிப்பின் விலை ரூ.18,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா, தேர்ந்தெடுக்கப்பட்ட குரோமா விற்பனை நிலையங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள், சோனி சென்டர்கள் மற்றும் ஷாப் அட் எஸ்சி ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த இயர்பட்ஸை பிளாக், க்ரேஜ், க்ரீன் மற்றும் லாவெண்டர் ஆகிய கலர்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications