இந்தியாவில் சோனி அறிமுகம் செய்துள்ள ஸ்பீக்கர்கள் என்ன தெரியுமா?
சோனி நிறுவனம், புளூடூத் ஸ்பீக்கர்களையும் SRS-XB41, SRS-XB31 and SRS-XB21 என்ற மாடல் பெயர்களில் அறிமுகம் செய்துள்ளது.
சோனி நிறுவனம் இந்தியாவில் தற்போது சப்தங்கள் போன்ற இடைஞ்சல்கள் இல்லாத ஹெட்போனையும், புளூடுத் ஸ்பீக்கர்களையும் அறிமுகம் செய்துள்ளது. WF-SP700N, WI-SP600N, WI-SP500, WI-C300, WH-CH400, and WH-CH500அ என்ற பெயர்களில் வெளியாகியிருக்கும் இந்த சோனியின் தயாரிப்புகள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவற்றில் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்த WF-SP700N மாடல் ஹெட்போன் காதுகளுக்கு இதம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானை சேர்ந்த நிறுவனமான சோனி நிறுவனம், புளூடூத் ஸ்பீக்கர்களையும் SRS-XB41, SRS-XB31 and SRS-XB21 என்ற மாடல் பெயர்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் இந்த மாதம் முதல் இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கிடைக்கும்.
மேலும் சோனி WF-SP700N மாடல் வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் மற்றும் சவுண்ட்போர்ட் ஆகியவற்றுக்க்கு பொருந்தும் வகையில் உள்ளது. மேலும் இதுதான் உலகின் முதல் வாட்டர் ரெசிஸ்டெண்ட் மற்றும் வெளிச்சத்தம் இன்றி உருவாக்கப்பட்டிருக்கும் முதல் ஹெட்போன். இதில் உள்ள டபுள் சார்ஜர் மூலம் தேவையான பேட்டரி சார்ஜ் செயய்ப்பட்டு மூன்று முதல் ஐந்து மணி நேரங்கள் வரை சார்ஜ் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த WF-SP700N கூகுள் அசிஸ்டெட் செயலிக்கும் சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் கிடைக்கும் இந்த சோனி WF-SP700N இந்தியாவில் மே மாதம் 15ஆம் தேதி முதல் ரூ.12990 என்ற விலையில் கிடைக்கும்.
அதேபோல் சோனி WF-SP600N ஹெட்போனில் வடிவம் மிகவும் அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலும் சப்தம் இல்லாத வகையில், காதுக்கு இதம் தரும் மென்மையான மற்றும் 6 மணி நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் WF-SP700N போலவே இந்த சோனி WF-SP600N ஹெட்போன் மாடலும் கூகுள் அசிஸ்டெண்ட் செயலிக்கு பொருந்தும் வகையில் உள்ளது. கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் இந்த ஹெட்போன் அதே மே 15 முதல் ரூ.9990 என்ற விலையில் இந்தியாவில் கிடைக்கும். மேலும் WI-SP500, WI-C300, WH-CH400 மற்றும் WH-CH500 ஆகிய மாடல்கள் முறையே ரூ.4,990, ரூ.2,990, ரூ.3,790 மற்றும் ரூ.4,990, ஆகிய விலைகளில் இந்தியாவில் கிடைக்கும்.

சோனி நிறுவனத்தின் SRS-XB41, SRS-XB31 மற்றும் SRS-XB21 ஆகிய வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் குறித்து தற்போது பார்ப்போம். இந்த மூன்று மாடல் ஸ்பீக்கர்களும் புளூடூத் ஸ்பீக்கர்கள் என்பதும் இவைகளுக்கு எக்ஸ்ட்ரா பாஸ் சவுண்ட் பவர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் லைவ் சவுண்ட் மோட் மற்றும் பார்ட்டி பூஸ்டர் வசதிகளும் உண்டு. SRS-XB41 ஸ்பீக்கர்கள் ரூ.13999 என்ற விலையில் ஏப்ரல் 16 முதல் இந்திய மார்க்கெட்டுக்களில் கிடைக்கும்.

இந்த ஸ்பீக்கர்கள் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும். அதேபோல் RS-XB31 மாடல் ரூ.9990 விலையில் கருப்பு, நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் ஏப்ரல் 16 முதல் கிடைக்கும். மேலும் SRS-XB21 மாடல் ஸ்பீக்கர் ரூ.7990 என்ற விலையில் கருப்பு, நீலம், சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஏப்ரல் 16 முதல் கிடைக்கும்


Click it and Unblock the Notifications








