அடேய் சியோமி ஓரம்போ: வந்துவிட்டது சோனி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

சோனி புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.

|

கடந்த இரண்டு மாதங்களில் எல்ஜி, சியோமி, சாம்சங், டிசிஎல் போன்ற நிறுவனங்கள் அதிகளவு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக சியோமி நிறுவனம் மலிவு விலையில் அதநிவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடேய் சியோமி ஓரம்போ: வந்துவிட்டது சோனி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

தற்சமயம் சோனி நிறுவனம் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சோனி ஸ்மார்ட் டிவி மாடல்களின் பெயர் என்னவென்றால் Bravia KD-85X9000F மற்றும் KD-65X9000F என்று கூறப்படுகிறது.

சோனி:

சோனி:

Bravia KD-85X9000F மாடல் பொறுத்தவரை 85-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு KD-65X9000F ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை 65-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4கே எச்டிஆர்:

4கே எச்டிஆர்:

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கும் 4கே எச்டிஆர் தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் குறிப்பிட்ட சிறப்பம்சம் என்னவென்றால் TRILUMINOS டிஸ்பிளேவுடன் வெளிவருகிறது, இது துல்லியமான சிவப்பு, பச்சை மற்றும் ப்ளூ ஆகியவற்றை திரையில் வண்ணமயமான மாறும் தன்மையைக் காக்கும் வகையில் தயாரிக்கிறது. இந்த டிவிகளை இயக்கக்கூடியது,சோனி 4K எக்ஸ்-ரியாலிட்டி புரோ இமேஜ் என்ஜின் மற்றும் 4K HDR செயலி X1 எக்ஸ்ட்ரீம் உள்ளே இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

Bravia KD-85X9000F மற்றும் KD-65X9000F ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது மேலும் நெட்ஃபிக்ஸ் மற்றும் கூகுள் டிவி செயலிகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டிஜிட்டல் சரவுண்ட் :

டிஜிட்டல் சரவுண்ட் :

இரண்டு ஸ்மார்ட் டிவி சாதனங்களில் டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் அம்சம் மற்றும் Cinematic S-Force Front Surround, ClearAudio +, DSEE போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.1, எச்டிஎம் போர்ட்கள், யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் ஈத்தர்நெட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

சோனி புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு Bravia KD-85X9000F சாதனத்தின் விலை ரூ.12,99,900-ஆக உள்ளது. மேலும் KD-65X9000F சாதனத்தின் விலை ரூ.3,39,900-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Launches 85 inch 4K HDR Android TV at a Price of Rs 1299900:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X