இந்தியா: சோனி 75-இன்ச் 4கே எச்டிஆர் எல்இடி டிவி அறிமுகம் - விலை தான் தாறுமாறு.!
பின்பு 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
இந்தியாவில் சோனி நிறுவனம் தனது 75-இன்ச் 4கே எச்டிஆர் எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, ஆனால் இந்த டிவியின் விலை மட்டும் வியக்கவைக்கும் விலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி 75-இன்ச் 4கே எச்டிஆர் எல்இடி டிவி மாடல் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப் வசதிகளை மிக எளிமையாக இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

டிஸ்பிளே:
சோனி 75-இன்ச் 4கே எச்டிஆர் எல்இடி டிவி பொறுத்தவரை 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இவற்றில் உள்ள டைனமிக் ரேஞ்ச் ப்ரோ தொழில்நுட்பம், திரை முழுவதும் ஒளி வெளியீட்டை சமப்படுத்துகிறது.
மேலும் இந்த சாதனத்தில் உள்ள X-Wide Angle தொழில்நுட்பம் அனைத்து பக்கங்களிலும் இருந்து பார்க்கும் போது சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் வகையில் வெளிவந்துள்ளது. பின்பு நெட்ஃபிக்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:
சோனி 75-இன்ச் 4கே எச்டிஆர் எல்இடி டிவி பொதுவாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத் 4.2, எச்டிஎம்ஐ, ஆர்எப் இன்புட், 3யுஎஸ்பி போர்ட், ஈத்தர்நெட் போர்ட், ஹெட்போன் ஜாக், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 37.2 கிலோ எடை கொண்டுள்ளது இந்த புதிய சோனி டிவி.

ஆடியோ:
புதிய சோனி ஆண்ட்ராய்டு டிவி மாடல் மல்டி-ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றை இரட்டை 10வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மூலம் வழங்குகிறது. குறிப்பாக தியேட்டர் அனுபவம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:
சோனி 75-இன்ச் 4கே எச்டிஆர் எல்இடி டிவி மாடலின் விலை ரூ.4,49,990-ஆக உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் கூகுள் அசிஸ்டென்ட் வசதியுடன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications