Home
Gadgets

சட்டை காலர்குள்ள AC.. SONY ரிலீஸ் செய்த புது வியரபில் ஏர் கண்டிஷனர்.. என்ன விலை? எங்கே வாங்கலாம்?

சோனி (SONY) நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போன் சைசில் இருக்கும் புதிய வியரபில் ஏர் கண்டிஷனர் (Wearable Air Conditioner) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உங்கள் கழுத்துடன் அல்லது உடம்புடன் மாட்டிக்கொள்ள அனுமதிக்கும் சிறிய வகை ஏசி போன்ற கூலிங் டிவைசாகும்.

வெயில் மண்டையை பிளக்கிறது, அனல் காற்று நம்மை திணறடிக்கிறது. ஏதேனும் ஒரு வேலைக்காக வெளியில் செல்ல வேண்டும் என்பதை நினைத்தாலே சோர்வு வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருக்கிறது. வெளியில் செல்லும் மக்கள், சூரியனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கையேடு ஒரு குடையை (Umberlla) எடுத்து செல்வார்கள். இது முந்தைய காலத்து டெக்னிக்.

சட்டை காலர்குள்ள AC.. SONY ரிலீஸ் செய்த புது வியரபில் ஏர் கண்டிஷனர்..

சட்டை காலர்குள்ள AC.. SONY அறிமுகம் செய்த புதிய ரியான் பாக்கெட் 5 வியரபில் ஏர் கண்டிஷனர் (Sony Reon Pocket 5 Wearable Air Conditioner):

இப்போது அடிக்கும் உக்கிரமான வெயிலுக்கு குடை பிடித்தும் பயனில்லை என்பது போல நிலைமை மாறிவிட்டது. வேலை பணிக்காக வெளியில் செல்லும் மக்கள் இப்போது கையேடு குடையை எடுத்து செல்வதற்கு பதிலாக கூலிங் ஃபேன் (cooling fan), நெக்பேண்ட் ஃபேன் (neckband fan), போர்ட்டபிள் மினி ஏசி (portable mini ac) போன்ற மினி சைஸ் கூலிங் கேட்ஜெட்களை (cooling gadgets) எடுத்து செல்கின்றனர்.

சம்மர் (Summer) வந்துவிட்டால், மினி கூலிங் கேட்ஜெட்ஸ்களுக்கான மவுசும் அதிகரித்துவிடுகிறது. இதை அறிந்த சோனி நிறுவனம் இந்த ஆண்டின் சூட்டை தணிக்க உதவும் ஒரு புதிய வியரபில் ஏர் கண்டிஷனர் (Wearable Air Conditioner) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை சோனி நிறுவனம் சோனி ரியான் பாக்கெட் 5 (Sony Reon Pocket 5) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு வித்தியாசமான கூலிங் டிவைஸ் ஆகும்.

இது ஒரு பியூச்சர்ஸ்டிக் பாடி ஏர் கண்டிஷனர் சாதனம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, மனித உடலுடன் ஒட்டி வெப்பத்தை தணிக்க அனுமதிக்கும் சிறிய வகை ஏசி (AC) சாதனம் இது என்பது பொருளாகும். நீங்கள் அணியும் சட்டை அல்லது டி-ஷர்ட் உள்ளே இரண்டு சிறிய கம்பி போன்ற சாப்ட் பாரை தோள்பட்டை வழியாக கழுத்தின் அருகில் அமர்வது போல இந்த டிவைஸை நீங்கள் உங்கள் உடம்புடன் பொறுத்த வேண்டும்.

சட்டை காலர்குள்ள AC.. SONY ரிலீஸ் செய்த புது வியரபில் ஏர் கண்டிஷனர்..

Sony Reon Pocket 5 சிறப்பம்சம் மற்றும் விலை விபரம்:

உங்கள் உடல் வெப்பம் மற்றும் உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள வெப்பத்திற்கு ஏற்றவாறு இந்த சோனி ரியான் பாக்கெட் 5 (Sony Reon Pocket 5) கூலிங் சாதனம் கூலிங் காற்றை கொண்டு வெப்பத்தை தணித்து உங்களை கூலிங்காக உணரச் செய்கிறது. இந்த சோனி ரியான் பாக்கெட் 5 சாதனம் இன்றைய வெப்பமயமான காலகட்டத்திற்கு ஏற்ற சாதனம் என்று சோனி நம்புகிறது.

இதில் பல வகை சென்சார்கள் மற்றும் ஏர் இன்லெட், ஏர் அவுட்லெட் போன்ற சிறப்பான விஷயங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதன் மைய பகுதியில் ஒரு பெரிய மெட்டல் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி தான் உங்கள் பின்னங்கழுத்தில் கூலிங்கை வழங்கி உங்களை உடனே குளிர்ச்சியடைய செய்கிறது. ஏர் வென்ட் மூலம் குளுமையான காற்று வேகமாக வெளியேற்றப்படுகிறது.

இந்த சாதனம் வெயில் காலம் மட்டுமின்றி குளிர் காலத்திற்கும் பயன்படும் வகையில் சோனி இதை உருவாக்கியுள்ளது. ஆம் மக்களே, இது சம்மர் சீஸனில் ஏசியாகவும், குளிர் காலத்தில் ஹீட்டர் சாதனமாகவும் செயல்படுகிறது. ஆம், சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, கூலிங் மற்றும் ஹீட்டர் சாதனமாக வந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,000 விலை முதல் துவங்குகிறது.

இது மே 15ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்திய சந்தைக்கும் இது கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
SONY Launched REON POCKET 5 a New Wearable Air Conditioner Thats Stick Inside Shirt Collar To Beat The Summer Heat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X