Home
Gadgets

PS5-க்கு இதை வாங்குங்க.. SONY இறக்கிய இன்சோன் வயர்லெஸ் ஹெட்செட்.. 30 மணி நேரங்களுக்கு பேக்கப்.. எந்த மாடல்?

அல்ட்ரா பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் வயர்லெஸ் ஹெட்செட் தேடிக்கொண்டிருக்கும் கேமிங் பிரியர்களுக்கு சோனி இன்சோன் எச்9 II (Sony INZONE H9 II) மாடல் பக்காவாக களமிறங்கி இருக்கிறது. லைட் வெயிட், டிடாச்சபிள் கார்டாய்ட் ஏஐ மைக் மட்டுமல்லாமல், நாய்ஸ் கேன்சலிங், 30 மணி நேரங்களுக்கு பேக்கப் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த சோனி இன்சோன் எச்9 II மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சோனி நிறுவனத்தின் பிஎஸ்5 மட்டுமல்லாமல், பிசி கேமிங் பிரியர்களுக்கும் கனவு ஹெட்செட் மாடலாக இந்த சோனி இன்சோன் எச்9 II களமிறங்கி இருக்கிறது. காம்போசைட் டிரைவர்கள் மற்றும் அட்வான்ஸ் நாய்ஸ் கேன்சலிங் ஆகியவற்றுடன் ப்ரோ-கிரேடு கிளாரிட்டி கொடுக்கிறது. ஆகவே, ஓப்பன் வேர்ல்டு கேமிங் மட்டுமல்லாமல், மற்ற கேம்களுக்கும் பிரீமியம் அனுபவம் கொடுக்கும்.

PS5-க்கு இதை வாங்குங்க.. SONY இறக்கிய இன்சோன் வயர்லெஸ் ஹெட்செட்!

டூயல் வயர்லெஸ் கனெக்டிவிட்டியுடன் (Dual Wireless Connectivity) சாட் சின்க் கிடைக்கிறது. ஆம்பியன்ட் நாய்ஸ் கன்ட்ரோல் கொடுக்கும்படி பூம் மைக் (Boom Mic) கிடைக்கிறது. இதுபோக சூப்பர் வைடு பேண்ட் (Super Wide Band) கிடைப்பதால், ஆடியோவில் கிரிஸ்டல் கிளியர் கிளாரிட்டி கிடைக்கும். 30 மணி நேரங்களுக்கு பேக்கப் மட்டுமல்லாமல், 260 கிராம் எடையில் லைட் வெயிட் பாடி கொடுக்கிறது.

சோனி இன்சோன் எச்9 II அம்சங்கள் (Sony INZONE H9 II Specifications): இந்த சோனி இன்சோன் மாடலில் அட்வான்ஸ்டு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Advanced Active Noise Cancellation) சப்போர்ட் கொண்ட டபுள்யூ-100எக்ஸ்எம்6 (WH-1000XM6) டிரைவர்கள் கிடைக்கிறது. மேலும், ஏஐ நாய்ஸ் ஃபில்டரிங் (AI Noise Filtering) மற்றும் சூப்பர் வைடுபேண்ட் ஆடியோ (Super Wideband Audio) கிடைக்கிறது.

ஆகவே, ஏஎன்சி மோட் (ANC Mode) மற்றும் ஆம்பியன் சவுண்ட் மோட் (Ambient Sound Mode) கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் கிளாசிக் 5.3 (Bluetooth Classic 5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதுவொரு எல்இ ஆடியோ (LE Audio) சப்போர்ட் மாடலாக இருக்கிறது. எல்சி3 (LC3), எஸ்பிசி (SBC), எச்எஸ்பி (HSP), எச்எப்பி (HFP), ஏ2டிபி (A2DP) போன்ற ஆடியோ கோடக் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த சோனி இன்சோன் எச்9 II மாடலில் ஏஎன்சி மோட் ஆப் செய்யப்பட்டிருந்தால் 30 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். 3.5 மணி நேரங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். குயிக் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 1 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். மைக் இல்லாமல் 260 கிராம் எடை மட்டுமே வருகிறது.

ஆகவே, நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் கம்போர்டபிளாக இருக்கும். மியூட் பட்டனுடன் கார்டாய்டு பூம் மைக் (Cardioid Boom Mic) கிடைக்கிறது. பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் 360 டிகிரி ஸ்பாஷியல் சவுண்ட் (Spatial Sound) சப்போர்ட் கிடைக்கிறது. இது கேமிங்குக்காக என்ஹான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. குளோஸ்டு டைனாமிக் டிசைன் (Closed Dynamic Design) வருகிறது.

பிஎஸ்5 கன்சோலுக்கு ஏற்ப பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) கலர்களில் கிடைக்க இருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் ஆடியோ பீச்சர்கள் கிடைப்பதால், ரூ.28,990 பட்ஜெட்டில் வெளியாகி இருககிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிரீமியம் கேமிங் பீச்சர்களுடன் ஹெட்செட் வேண்டுமானால், இந்த சோனி இன்சோன் மாடலை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony INZONE H9 II Gaming Headset For PC PS5 Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X