Home
Gadgets

உச்ச கட்ட கேமிங் பட்ஸ்.. 360 ஆடியோ.. கஸ்டமைசபிள் கன்ட்ரோல்.. AI மைக்ரோபோன்.. எந்த மாடல்?

360 ஆடியோ, ஏஐ மைக்ரோபோன், கஸ்டமைசபிள் டச் கன்ட்ரோல், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி, ப்ளூடூத் எல்இ ஆடியோ போன்ற உச்சக்கட்ட அல்ட்ரா பிரீமியம் அம்சங்களை கொண்ட சோனி இன்சோன் பட்ஸ் (Sony INZONE Buds) கேமிங் பிரியர்களை மிரளவிட்டுள்ளது.

சோனி இன்சோன் பட்ஸ் அம்சங்கள் (Sony INZONE Buds Specifications): இந்த சோனி பட்ஸ் மாடலில் 8.4 மிமீ டிரைவர்கள் (Drivers) வருகின்றன. ப்ளூடூத் வெர்ஷன் 5.3 (Bluetooth Version 5.3) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. அதோடு எல்இ ஆடியோ டெக்னாலஜி (LE Audio Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது.

360 ஆடியோ.. கஸ்டமைசபிள் கன்ட்ரோல்.. AI மைக்ரோபோன்.. எந்த மாடல்?

இந்த வேரியண்ட்டில் 2.4 GHz வயர்லெஸ் கனெக்சன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி டாங்கிள் (USB Type-C Dongle) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) வருகிறது. ஆகவே, அவுட்டோரிலும் ஆடியோ குவாலிட்டி (Audio Quality) பக்காவாக இருக்கும்.

இதுவொரு அல்ட்ரா பிரீமியம் கேமிங் இயர்பட்ஸ் (Ultra Premium Gaming Earbuds) என்பதால், கேமிங் பிரியர்களை மிரளவிடும் விதமாக 360 ஸ்பாசியல் சவுண்ட் (360 Spatial Sound) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது கேமிங்களுக்கு ஏற்றபடி, 360 ஆடியோ அனுபவத்தை கொடுக்கக் கூடியது.

அதோடு 30எம்எஸ் அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட் (Ultra Low Latency Mode) சப்போர்ட் வருகிறது. ஸ்மார்ட்போன், பிளேஸ்டேஷன், லேப்டாப், டெக்ஸ்டாப் போன்ற மல்டிபிள் டிவைஸ்களில் (Multiple Devices) ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஈகியூ (EQ) சப்போர்ட் வருகிறது.

அதேபோல கஸ்டமைசபிள் டச் கன்ட்ரோல் (Customizable Touch Controls) வருகிறது. ஏஐ அசிஸ்டெட் மைக்ரோபோன்கள் (AI-assisted Microphones) கொண்டிருக்கிறது. இந்த சோனி மாடலில் இன்சோன் ஹப் பிசி (INZONE Hub PC) சாப்ட்வேர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. IPX4 தர ஸ்பிளாஷ் ப்ரூஃப் (Splash Proof) வருகிறது.

360 ஆடியோ.. கஸ்டமைசபிள் கன்ட்ரோல்.. AI மைக்ரோபோன்.. எந்த மாடல்?

இந்த மாடலானது, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் வேளையில், 12 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது. அதுவே ஆன் செய்யப்பட்டிருந்தால், 11 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். நீண்ட பேக்கப் வேண்டுமானால், ப்ளூடூத் எல்இ ஆடியோ (Bluetooth LE Audio) மோடை பயன்படுத்தலாம்.

இதில் அதிகபட்சமாக 24 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். இந்த சோனி இன்சோன் பட்ஸ் மாடலுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 1 மணி நேரத்துக்கு பயன்படுத்தலாம். இந்த 2 இயர்பட்டின் வெயிட் தலா 6.5 கிராம் இருக்கிறது.

ஆகவே, நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் காதுகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும். இந்த சோனி பட்ஸ் பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 17,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோனி ரீடெயில் ஸ்டோர்களில் (Sony Retail Stores) எக்ஸ்க்ளுசிவ் விற்பனை தொடங்கி இருக்கிறது.

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற தளங்களில் வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 360 ஆடியோ சப்போர்ட், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் எல்இ டெக்னாலஜி, கஸ்டமைசபிள் டச் கன்ட்ரோல் போன்ற அல்ட்ரா பிரீமியம் அம்சங்கள் வேண்டுமானால், இந்த மாடலை வாங்குங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony INZONE Buds With 360 Spatial Sound For Gaming Sale From January 22 India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X