சியோமி, சாம்சங், எல்ஜி ஓரம்போ: வந்துவிட்டது சோனி ஸ்மார்ட் டிவி.!
புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
சோனி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து மின்சாதனங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அந்தவகையில் தற்சமயம் மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு சியோமி, சாம்சங், எல்ஜி மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது, குறிப்பாக சியோமி மற்றும் டிசிஎல் நிறுவனங்கள் ரூ.13,999-க்குள் சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியது, மேலும் இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

4K HDR X9000F:
தற்சமயம் சோனி நிறுவனம் 4K HDR X9000F ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 85-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் டிரிலூமினோஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது, குறிப்பாக இது சிறந்த நிற வேறுபாடுகள் கொடுக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் 4கே-எச்டிஆர் 10 ஹைப்ரிட் லாக்-காமா மற்றும் டால்பி விஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆதரக்கிறது.

பேக்லைட் :
4K HDR X9000F ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக மைக்ரோ டிம்மிங் பேக்லைட் தொழில்நுட்பம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, இது உயர்ந்த அனுபவத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 7.0:
புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல்கள் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்படி யூட்யூப், நெட்ஃப்ளிக்ஸ், மற்றும் நுசழள போன்ற அனைத்து ஆதரவுகளையும் கொண்டுள்ளது. மேலும் சிறந்த தொழில்நுட்ப அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

சேமிப்பு:
இப்போது வெளிவந்துள்ள சோனி ஸ்மார்ட் டிவி மாடல்கள் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு குறிப்பிட்ட ரேம் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த சாதனங்கள்.


விலை:
10+10 ஆடியோ பவர் அவுட்புட், டிடிஎஸ் டிஜிட்டல் தொழில்நுட்பம், 4எச்டிஎம்ஐ போர்ட், 1ஆர்எப் போர்ட், ஈத்தர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 4K HDR X9000F ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.2,39,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








