இந்தியா: சோனி ஜி சீரிஸ் சிஃபாஸ்ட் மெம்மரி கார்டு அறிமுகம்.!

இந்த சோனி ஜி சீரிஸ் மெம்மரி கார்டுகளின் மூலம் உயர்தர பகுப்பாய்வு கொண்ட படங்களுக்கான அதிக வேக படப்பிடிப்பு முறை வசதியை பெற முடிகிறது. கைத்தேர்ந்த போட்டோகிராஃபர்கள் மற்றும் வீடியோகிராஃபர்களைக் கருத

|

கைத்தேர்ந்த போட்டோகிராஃபர்கள் மற்றும் வீடியோகிராஃபர்களைக் கருத்தில் கொண்டு, தனது ஜி சீரிஸில் உட்படும் புதிய அதிவேக சிஃபாஸ்ட் மெம்மரி கார்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மெம்மரி கார்டுகள், ரூ.7,400 விலை நிர்ணயத்தில் அமைந்த 32ஜிபி (சிஏடி-ஜி32), ரூ.11,400 விலை நிர்ணயத்தில் அமைந்த 64ஜிபி (சிஏடி-எஸ்64) மற்றும் ரூ.22,100 விலை நிர்ணயத்தில் அமைந்த 128ஜிபி (சிஏடி-எஸ்128) என்ற மூன்று கொள்ளளவுகளில் கிடைக்கப் பெறுகின்றன.

இந்தியா: சோனி ஜி சீரிஸ் சிஃபாஸ்ட் மெம்மரி கார்டு அறிமுகம்.!

கடந்த 26 ஆம் தேதி முதல் மேற்கூறிய இந்த மூன்றும், நாடெங்கிலும் உள்ள சோனியின் ஆல்ஃபா ஆஃப்லைன் ஸ்டோர்கள், சோனி சென்டர் ஸ்டோர்கள் மற்றும் இதர முன்னணி எலக்ட்ரானிக் ஸ்டோர்களில் கிடைக்கப் பெறுகின்றன. இந்த மெம்மரி கார்டுகளின் மூலம் 510எம்பிபிஎஸ் வரையிலான எழுதும் வேகத்தையும், 530எம்பிபிஎஸ் வரையிலான வாசிப்பு வேகத்தையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த சோனி ஜி சீரிஸ் மெம்மரி கார்டுகளின் மூலம் உயர்தர பகுப்பாய்வு கொண்ட படங்களுக்கான அதிக வேக படப்பிடிப்பு முறை வசதியை பெற முடிகிறது. புதிய சிஃபாஸ்ட் கார்டுகள், அதிக பிட் வீதமுள்ள 4கே வீடியோக்களை பதிவு செய்யும் வகையில் விபிஜி130-க்கு ஆதரவு அளிக்கின்றன. இது தவிர, இந்த மெம்மரி கார்டுகள் பல முறை கீழே போடுதல், விரைப்பு மற்றும் அதிர்வு போன்ற பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி தேர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா: சோனி ஜி சீரிஸ் சிஃபாஸ்ட் மெம்மரி கார்டு அறிமுகம்.!

வெளியோட்டமான மற்ற பாதிப்புகளில் இருந்து கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் வகையில், இதற்கு ஒரு கடினமான பெட்டி காணப்படுகிறது. கார்டுகளில் உள்ள கோப்புகளைப் பாதுகாக்கும் வகையில், தவறுதலாக நீக்கப்பட்டவற்றை மீட்க, சோனியின் கோப்பு பாதுகாப்பு சாஃப்ட்வேர் உதவுகிறது. ஆனாலும் ஒரு அகற்றக்கூடிய டிஸ்க் கட்டமைப்பில் உள்ள ஒரு கார்டு ரீடரை பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

இது குறித்து சோனி இந்தியா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான அறிவிப்பில், "நெருக்கடி மிகுந்த காலக்கெடு கொண்டு சவால் மிகுந்த சூழ்நிலையில் பணியாற்றும் கைத்தேர்ந்த போட்டோகிராஃபர்கள் மற்றும் வீடியோகிராஃபர்களுக்கு, திறமையாக பணியாற்றும் திறன் அத்தியாவசியமாக உள்ளது. சோனியின் ஜி சீரிஸ் சிஃபாஸ்ட் அளிக்கும் 530எம்பிபி/எஸ் என்ற அதிவேக வாசிப்பு திறன் மூலம் மூல கோப்புகளை இடமாற்றும் செய்யவும், நீண்ட 4கே வீடியோ புட்டேஜ் மற்றும் உயர்தர பகுப்பாய்வு படங்களை பிசி-க்கு இடமாற்றம் செய்யவும் எடுத்து கொள்ளும் நேரம் வெகுவாக குறைகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: சோனி ஜி சீரிஸ் சிஃபாஸ்ட் மெம்மரி கார்டு அறிமுகம்.!

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சோனி எஸ்எஃப்-ஜி சீரிஸில் மெம்மரி கார்டுகளில் இருந்து, "உலகின் அதிவேக எஸ்டி கார்டு" என்ற பட்டத்தை இந்த மெம்மரி கார்டுகள் பெறும் என்பதில் எந்தொரு சந்தேகமும் இல்லை. 32ஜிபி, 64ஜிபி மற்றும் 128ஜிபி என்று மூன்று வகைகளில் கிடைக்கப் பெறும் இந்த எஸ்எஃப்-ஜி சீரிஸில், 300எம்பிபிஎஸ் வாசிப்பு வேகமும், 299எம்பிபிஎஸ் எழுதும் வேகமும் இருப்பதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Sony G Series CFast Memory Cards With Write Speeds of Up to 510MBps Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X