அசத்தலான அம்சங்களுடன் 85-இன்ச் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்த Sony.! விலை எவ்வளவு தெரியுமா?
சோனி நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகள் சற்று உயர்வான விலையில் வெளிவந்தாலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோனி நிறுவனம் இந்தியாவில் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சோனி பிரேவியா எக்ஸ்ஆர்-எக்ஸ்95எல் 85 4கே எச்டிஆர் மினி (Sony BRAVIA XR-X95L 85 4K HDR Mini) எனும் 85-ஸ்மார்ட் டிவி தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி அதிநவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

நெக்ஸ்ட் ஜென் காக்னிடிவ் XR பிராசஸர் வசதியுடன் இந்த சோனி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்டிவி மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்ட் பூஸ்டர், எக்ஸ்ஆர் Triluminos ப்ரோ, எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ்,எக்ஸ்ஆர் 4கே அப்ஸ்கேலிங் மற்றும் எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி போன்ற சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சோனி ஸ்மார்ட் டிவி.
குறிப்பாக இந்த சோனி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும். பின்பு 3840 x 2160 பிக்சல்ஸ், 100ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, எச்எல்ஜி, டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 85-இன்ச் சோனி பிரேவியா ஸ்மார்ட் டிவி.
விவிட்(Vivid), ஸ்டாண்டர்ட், சினிமா, ஐமேக்ஸ், கேம், கிராபிக்ஸ், டால்பி விஷன் விவிட்/பிரைட்/டார்க்), நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட பல பிக்சர் மோட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சோனி ஸ்மார்ட் டிவி. காக்னிடிவ் XR பிராசஸர் ஆனது துல்லியமான காட்சி மட்டுமின்றி சிறப்பான ஆடியோ அனுபவத்தையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்6 10W ஆடியோ அவுட்புட் வழங்குகிறது இந்த 85-இன்ச் ஸ்மார்ட் டிவி. மேலும் ஃபிரேம் ட்வீட்டர் டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ், டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் சவுண்ட் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டு இந்த சோனி பிரேவியா ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.
அதேபோல் கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டு இந்த சோனி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 32ஜிபி ஸ்டோரேஜ், வாய்ஸ் சர்ச் ரிமோட், பிரேவியா கேமரா ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சோனி டிவி.

டூயல் பேண்ட் பேண்ட், புளூடூத் வி4.2, க்ரோம்காஸ்ட் ஆதரவு, ஆப்பிள் ஏர்பிளே. ஆப்பிள் ஹோம்கிட், எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் அவுட்புட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 85-இன்ச் சோனி பிரேவியா ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
மேலும் சோனி பிரேவியா எக்ஸ்ஆர்-எக்ஸ்95எல் 85 4கே எச்டிஆர் மினி மாடல் ரூ.5,99,990-விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் சோனி கடைகளில் இந்த டிவியை வாங்க முடியும். அதேபோல் சோனி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








