Home
Gadgets

டிவி சூப்பரா இருக்கு.. ஆனால் விலை தான் கொஞ்சம் ஓவர்.. 4கே Sony டிவிகள் அறிமுகம்.!

சோனி நிறுவனம் தரமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவியும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. ஆனால் மற்ற நிறுவனங்களை விட சற்று உயர்வான விலையில் தான் சோனி நிறுவனம் டிவிகளை அறிமுகம் செய்கிறது.

இந்நிலையில் சோனி நிறுவனம் பிரேவியா எக்ஸ்ஆர் எக்ஸ்90எல் (BRAVIA X90L) சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அதாவது சோனி பிரேவியா எக்ஸ்ஆர் எக்ஸ்90எல் 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று டிவிகளும் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளன.

4கே Sony டிவிகள் அறிமுகம்.! ஆனால் விலை தான் கொஞ்சம் ஓவர்..

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. பின்பு 3840X2160 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. இதுதவிர எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்ட் பூஸ்டர், எக்ஸ்ஆர் Triluminos ப்ரோ, எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் மற்றும் எக்ஸ்ஆர் 4கே அப்ஸ்கேலிங் மற்றும் எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி போன்ற பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த டிவிகள்.

குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்கள் தலைசிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள காக்னிடிவ் XR பிராசஸர் காட்சி மட்டுமின்றி சிறப்பான ஆடியோ அனுபவத்தையும் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை நம்பி வாங்கலாம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

4கே Sony டிவிகள் அறிமுகம்.! ஆனால் விலை தான் கொஞ்சம் ஓவர்..

XR சரவுண்ட், 3D சரவுண்ட் அப்ஸ்கேலிங், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த சோனி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் இவற்றில் உள்ள XR 4K அப்ஸ்கேலிங் மற்றும் XR சவுன்ட் பொசிஷன், டிவி பார்க்கும் போது ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த டிவிகள் பல்வேறு கேமிங் வசதிகளுடன் வெளிவந்துள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.

கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்கள் உட்பட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். பின்பு இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் வாய்ஸ் சர்ச் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

4கே Sony டிவிகள் அறிமுகம்.! ஆனால் விலை தான் கொஞ்சம் ஓவர்..

55-இன்ச் கொண்ட சோனி பிரேவியா எக்ஸ்ஆர் எக்ஸ்90எல் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,39,990-ஆக உள்ளது. பின்பு இதன் 65-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,79,990-ஆக உள்ளது. இந்த இரண்டு சோனி டிவிகளின் விற்பனை ஏற்கனவே சோனி சென்டர்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் தொடங்கிவிட்டது. ஆனால் இதன் 75-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதன் விலை அறிவிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Sony BRAVIA X90L 55, 65 and 75 4K Smart TVs launched in India: Check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X