டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம், புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Sony.!
சோனி நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட தனித்துவமான டிஸ்பிளே வசதிகளுடன் சோனி ஸ்மார்ட் டிவிகள் வெளிவருகின்றன. எனவே தான் இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சோனி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது சோனி பிராவியா எக்ஸ்82எல் (Sony BRAVIA X82L) 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மூன்று ஸ்மார்ட் டிவிளும் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. பின்பு டால்பி விஷன், எச்டிஆர், Triluminousப்ரோ அல்காரிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சோனி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் Acoustic Multi Audio வசதி இருப்பதால் நமக்கு நேரடியாக இருந்து கேட்பது போன்ற அனுபவம் கிடைக்கும். இதுதவிர டால்பி அட்மோஸ் சவுண்ட் ஆதரவு கொண்டு இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த சோனி பிராவியா எக்ஸ்82எல் ஸ்மார்ட் டிவிகள் கூகுள் டிவி ஒஎஸ் (இயங்குதளம்) மூலம் இயங்குகின்றன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் இவற்றில் Bravia Core App மூலம் நம்மால் 12 மாதங்களுக்கு 4K Blu-Ray தரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யலாம். இதன் மூலமாக Dolby Atmos மற்றும் IMAX தரத்தில் பார்க்கமுடியும். குறிப்பாக சோனி பிராவியா எக்ஸ்82எல் ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, ஆப்பிள் ஏர்பிளே, ஹோம்கிட்ட போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய சோனி ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக 4கே எச்டிஆர் பிக்சர் எஞ்சின் ஆதரவு கொண்டு இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளில் X-Protection PRO தொழில்நுட்பம் கூட உள்ளது.

சோனி பிராவியா எக்ஸ்82எல் ஸ்மார்ட் டிவிகளை நாம் PS5 கன்சோல் உடன் சுலபமாக கனெக்ட் செய்யலாம். மேலும் இவற்றில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. பின்பு சோனி பிராவியா எக்ஸ்82எல் 55-இன்ச் டிவியின் விலை ரூ.91,900-ஆக உள்ளது. இதன் 65-இன்ச் மாடலின் விலை ரூ.1,24,990-ஆக உள்ளது. இதன் 75 இன்ச் மாடல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜூன் 2 முதல் 55 மற்றும் 65 இன்ச் டிவி விற்பனை செய்யப்படும். சோனி சென்டர், ரீடைல் கடைகள் என பல இடங்களில் இந்த டிவிகள் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications