அப்படி போடு: 3 ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Sony.! விலையை சொன்னா நம்புவீங்களா?
ஒன்பிளஸ், சியோமி நிறுவனங்கள் இந்தியாவில் அதிகமாக ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் சோனி நிறுவனமும் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சோனி நிறுவனம் 3 ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சோனி நிறுவனம் தற்போது இந்தியாவில் சோனி பிராவியா எக்ஸ்80எல்(Sony BRAVIA X80L) 43-இன்ச், 50-இன்ச், 85-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சோனி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள 43-இன்ச், 50-இன்ச், 85-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது TRILUMINOS ப்ரோ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 3840×2160 பிக்சல்ஸ், 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் Motionflow XR மற்றும் பிரைட்நஸ் ஆப்டிமைஸ்டு லைட் சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள்.
இதுதவிர எச்டிஆர் 10 ஆதரவு, எச்எல்ஜி, டால்பி விஷன் உள்ளிட்ட முக்கியமான சிறப்பு அம்சங்களுடன் இந்தசோனி பிராவியா எக்ஸ்80எல் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவிகளில் காட்சிகளை மிகத் துல்லியமாகப் பார்க்க முடியும்.
எக்ஸ்1 4கே எச்டிஆர் பிக்சர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன இந்த சோனி பிராவியா எக்ஸ்80எல் 43-இன்ச், 50-இன்ச், 85-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகள். எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவி இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.

ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங், ஆட்டோ ஜெனர் பிக்சர் மோட், பிஎஸ்5 உள்ளிட்ட தரமான கேமிங் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளன. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளை நம்பி வாங்கலாம். அதாவது அனைத்து கேமிங் சிறப்பு அம்சங்களையும் இந்த டிவிகள் வழங்குகின்றன. இதுதவிர பிராவியா கோர், பிராவியா Pure Stream உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களையும் வழங்குகின்றன இந்த ஸ்மார்ட் டிவிகள்.
மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று ஸ்மார்ட் டிவிகள் எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளன. பின்பு டால்பி அட்மாஸ், ஸ்பேஷியல் சவுண்ட் உள்ளிட்ட தரமான ஆடியோ ஆதரவை வழங்குகின்றன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த மூன்று டிவிகளும் தியேட்டர் தர ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்பியண்ட் லைட் சென்சார், ஆட்டோ பவர் சேவிங், Eco டேஷ்போர்டு உள்ளிட்ட சிறப்பான வசதிகளுடன் இந்த சோனி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. பின்பு குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா, ஆப்பிள் ஏர்ப்ளே2, ஆப்பிள் ஹோம்கிட் போன்ற தனித்துவமான அம்சங்களையும் கொண்டுள்ளன இந்த சோனி ஸ்மார்ட் டிவிகள்.
வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சோனி ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக 43-இன்ச் சோனி பிராவியா எக்ஸ்80எல் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.99,990-ஆக உள்ளது. 50-இன்ச் சோனி பிராவியா எக்ஸ்80எல் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,14,900-ஆக உள்ளது.

குறிப்பாக 43-இன்ச் மற்றும் 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஏப்ரல் 19-ம் தேதி முதல் சோனி சென்டர்ஸ், எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் போர்டல்களில் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இதன் 85-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் விற்பனை விவரங்களை அந்நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








