வாரே வா... Sony அறிமுகம் செய்த 2 ஸ்மார்ட் டிவிகள்.! விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!
சோனி நிறுவனம் ஒன்பிளஸ், சியோமி, சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சோனி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோனி நிறுவனம் இந்தியாவில் சோனி பிராவியா எக்ஸ்70எல் (Sony BRAVIA X70L) 43-இன்ச், 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இந்த புதிய 43-இன்ச், 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது 4கே அல்ட்ரா ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 4கே எச்டிஆர் ஆதரவு, லைவ் கலர், 4கே எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ, மோஷன் ஃப்ளோ எக்ஸ்ஆர் 200 (Motion Flow XR200) ஏஎல்எம்எம் இன்புட் (ALLM Input) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவிகள்.
அதேபோல் சோனி பிராவியா எக்ஸ்70எல் 43-இன்ச், 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகள் எக்ஸ்1 4கே பிக்சர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன. இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் கொண்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் மேம்பட்ட திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதாவது இந்த பிராசஸர் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.
கேமிங் வசதிக்கு தகுந்தபடி PS5(பிஎஸ்5) அம்சத்தை வழங்குகின்றன இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகள். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளை நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த புதிய டிவிகள் ஸ்லிம் பெசலஸ் மற்றும் அசத்தலான ஸ்டாண்ட் ஆதரவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு சோனி ஸ்மார்ட் டிவி மாடல்களும் கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இயங்குகின்றன. அதேபோல் ஆப்பிள் ஹோம் கிட் மற்றும் ஏர்பிளேவுக்கான ஆதரவுகளை வழங்குகின்றன இந்த சோனி பிராவியா எக்ஸ்70எல் 43-இன்ச், 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகள். மேலும் இந்த டிவிகள் தூசி மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் எந்த பாதிப்பையும் இது சந்திக்காது.
இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் ரிமோட்டில் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு உள்ளது. இதுதவிர அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், சோனி LIV மற்றும் பல ஆப் பயன்பாடுகளுக்கான ஹாட்கிகளைக் கொண்டுள்ளன இந்த டிவிகளின் அசத்தலான ரிமோட். குறிப்பாக ஓடிடி-இல் படம் பார்க்க அதிக ஆர்வம் காட்டும் பயனர்கள் இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவிகளை வாங்குவது நல்லது.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்டு 20 வாட்ஸ் ஓப்பன்-பேஃபிள் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளன இந்த சோனி பிராவியா எக்ஸ்70எல் 43-இன்ச், 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.
குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சோனி பிராவியா எக்ஸ்70எல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.59,990-ஆக உள்ளது. ஆனால் இந்த டிவிக்கு அறிமுக சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை தற்போது ரூ.47,490-விலையில் வாங்க முடியும். பின்பு சோனி பிராவியா எக்ஸ்70எல் 50-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.74,900-ஆக உள்ளது. சோனி சென்டர்ஸ் மற்றும் சில ஆன்லைன ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications