Home
Gadgets

தாறுமாறா சவுண்ட்.. வீட்டுக்கே வந்த IMAX ஆடியோ.. SONY ரிலீஸ் செய்த குவாட் ஸ்பீக்கர் ஹோம் தியேட்டர் சிஸ்டம்..

உலகவில் பெஸ்ட் தியேட்டர் (Theatre) அனுபவத்தை வழங்கும் பிரீமியம் திரையரங்குகளில் ஒன்றாக ஐமேக்ஸ் (IMAX) போன்ற தரம் இனி வீட்டினிலேயே கிடைக்குமென்கிறது சோனி (SONY). இதற்கு காரணம் சோனி தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய குவாட் ஹோம் தியேட்டர் சிஸ்டம் தான்.

ஆம் மக்களே, ஐமேக்ஸ் தியேட்டர்களில் கிடைக்கும் அதே உயர்தர தியேட்டர் ஆடியோவை (Hi-Res Audio) வழங்கும் புதிய ஹோம் தியேட்டர் (Home Theatre) சாதனத்தை சோனி இப்போது அறிமுகம் செய்துள்ளது. இதை சோனி நிறுவனம் இப்போது சோனி ப்ரவியா தியேட்டர் குவாட் ஹோம் தியேட்டர் சிஸ்டம் (Sony Bravia Theatre Quad home theater system) என்ற பெயருடன் அறிமுகம் செய்த்துள்ளது.

தாறுமாறா சவுண்ட்.. வீட்டுக்கே வந்த IMAX ஆடியோ.. SONY ஹோம் தியேட்டர்..

சோனி ப்ரவியா தியேட்டர் குவாட் ஹோம் தியேட்டர் சிஸ்டம் (Sony Bravia Theatre Quad home theater system):

இது 504W அவுட்புட் (output) உடன் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) மற்றும் டால்பி அட்மாஸ் சவுண்ட் (Dolby Atmos sound) ஆதரவுடன் வரும் மிகவும் சக்தி வாய்ந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் அம்சங்கள் ஒவ்வொன்றும் உங்கள் வீட்டு அறைக்குள் நேரடியாக தியேட்டர் அனுபவத்தை களமிறக்குகிறது. தியேட்டர் என்றதும் சாதாரண தியேட்டர் என்று எண்ணிவிடாதீர்கள்.

இது பிரீமியம் தியேட்டர் அனுபவமான ஐமேக்ஸ் தியேட்டர் ஆடியோ அனுபவத்தை உங்கள் வீட்டிற்கே கொண்டு வருகிறது. காரணம் இது வீட்டில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கி சிறப்பைட செய்யும் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சோனி குவாட் ஹோம் தியேட்டர் சாதனம் வழக்கமான சவுண்ட்பார் போல இல்லாமல் 360 டிகிரி ஸ்பேஷியல் சவுண்ட் என்விரான்மெண்ட் (360-degree spatial sound environment) ஆடியோவை வழங்குகிறது.

இதுவொரு லேட்டஸ்ட் ஆடியோ டெக்னாலஜி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோனி பிறவியா தியேட்டர் குவாட் ஹோம் தியேட்டர் சிஸ்டம் (Sony Bravia Theatre Quad home theater system) அம்சங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தாறுமாறா சவுண்ட்.. வீட்டுக்கே வந்த IMAX ஆடியோ.. SONY ஹோம் தியேட்டர்..

- சேனல்ஸ்: இது 4.0.4 சரவுண்ட் சவுண்ட் சேனல் அம்சத்தை ஆதரிக்கிறது.
- ஸ்பீக்கர்ஸ்: இது இரண்டு புள் ரேஞ் ஸ்பீக்கர் உடன் அக்குஸ்டிக் சஸ்பென்ஷன் (acoustic suspension) உடன் சப்வூஃப்பர் பாஸ் ரிப்ளெக்ஸ் (woofer with bass reflex) மற்றும் எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட் (X-Balanced Speaker Unit) உடன் இறுதியாக ஒரு ட்வீட்டர் (tweeter) ஆகியற்றை இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் கொண்டுள்ளது.

- அப்ஃபையரிங் ஸ்பீக்கர்ஸ்: இதில் 2 அப்ஃபையரிங் ஸ்பீக்கர் (36 mm x 79 mm) உடன் எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட் உடன் வெர்டிக்கள் சவுண்ட் டைமென்சஹானை கொண்டுள்ளது.
- ஆம்ப்ளிஃபையர்: டிஜிட்டல் ஆம்ப்ளிஃபையர், எஸ்-மாஸ்டர் எச்எக்ஸ் உடன் 16 சேனல் (S-Master HX with 16 channels) மூலம் 540W மொத்த அவுட்புட் ஆடியோவை வழங்குகிறது.

- சவுண்ட் அம்சம்: இந்த குவாட் ஸ்பீக்கர்கள் ப்ரவியா அக்குஸ்டிக் சென்டர் சிங்க் (BRAVIA Acoustic Center Sync), டயலாக் கிளாரிட்டிக்காக வாய்ஸ் ஜூம்3 (Voice Zoom3) மற்றும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு மற்றும் டால்பி அட்மாஸ் சவுண்ட் அம்சத்தை வழங்குகிறது.
- கனெக்டிவிட்டி: இதில் HDMI, ஈதர்நெட் (Ethernet), வைஃபை (Wi-Fi) IEEE802.11 a/b/g/n/ac, மற்றும் ப்ளூடூத் (Bluetooth v5.2) உடன் AAC, SBC, LDACஆதரவுடன் வருகிறது.

சோனி ப்ரவியா தியேட்டர் குவாட் ஹோம் தியேட்டர் சிஸ்டம் விலை:

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய சோனி ப்ரவியா தியேட்டர் குவாட் ஹோம் தியேட்டர் சிஸ்டம் இந்தியாவில் ரூ. 1,99,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது சோனி ஸ்டோர்ஸ் மற்றும் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Bravia Theatre Quad Home Theater System With IMAX Enhanced Dolby Atmos Audio Sound Price Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X