Home
Gadgets

Sony அறிமுகம் செய்த புதிய 115-இன்ச் டிவி.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்? என்ன விலை?

சோனி (sony) நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான டிவிகளை அறிமுகம் செயக்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சோனி நிறுவனம் 115-இன்ச் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது சோனி நிறுவனம் இந்தியாவில் சோனி பிராவியா 9II 115-இன்ச் டிவி (Sony BRAVIA 9II 115 inch TV) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய சோனி டிவி வெளியாகி உள்ளது. இப்போது சோனி பிராவியா 9II 115-இன்ச் டிவி மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Sony அறிமுகம் செய்த புதிய 115-இன்ச் டிவி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்

சோனி பிராவியா 9II 115-இன்ச் டிவி அம்சங்கள் (Sony BRAVIA 9II 115 inch TV Specifications): 4கே எல்சிடி பேனல் உடன் சோனி பிராவியா 9II 115-இன்ச் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), லோக்கல் டிம்மிங் (Local Dimming), ஆர்ஜிபி எல்இடி பேக்லைட் (RGB LED backlight) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ஆர்ஜிபி பேக்லைட் மாஸ்டர் டிரைவ் ப்ரோ (RGB Backlight Master Drive Pro), எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்ட் பூஸ்ட் 40 (XR Contrast Booster 40), டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர், Luminance பூஸ்டர் ப்ரோ (Luminance Booster Pro), எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் (XR Clear Image), எக்ஸ்-வைடு ஆங்கிள் ப்ரோ (X-Wide Angle Pro) போன்ற பல பிக்சர் அம்சங்கள் இந்த புதிய சோனி 115-இன்ச் டிவியில் உள்ளன.

சக்திவாய்ந்த எக்ஸ் பிராசஸர் (XR Processor) உடன் சோனி பிராவியா 9II 115-இன்ச் டிவி மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), டால்பி விஷன் (Dolby Vision) போன்ற அம்சங்களும் இந்த புதிய சோனி டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.

டால்பி ஆடியோ (Dolby Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட 85W ஸ்பீக்கர் அவுட்புட் சிஸ்டம் இந்த டிவியில் உள்ளது. அதுவும் இதில் 12 ஸ்பீக்கர்கள் உள்ளன, அதன்படி 2 சப்வூஃபர்கள், 8 ஃபுல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் என மொத்தம் 12 ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சோனி டிவி வெளியாகி உள்ளது. குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கும்.

அதேபோல் நெட்பிளிக்ஸ் (Netflix), யூட்யூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். 32ஜிபி மெமரி ஆதரவையும் கொண்டுள்ளது புதிய சோனி 115 இன்ச் டிவி மாடல். அதுவும் இந்த டிவியில் இன்பில்ட் மைக்ரோபோன் ஆதரவும் உள்ளது.

ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங், ஆட்டோ ஜானர் பிக்சர் மோடு, விஆர்ஆர்(VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) உள்ளிட்ட பல்வேறு கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. க்ரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் போன்ற அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

Sony அறிமுகம் செய்த புதிய 115-இன்ச் டிவி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்

சோனி பிராவியா 9II 115-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.45,99,900-ஆக உள்ளது. விரைவில் இந்த டிவி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோனி 115-இன்ச் டிவியின் உடன் சோனி பிராவியா 9II 75-இன்ச் டிவி மாடல் ரூ.8,39,900 விலையிலும், சோனி பிராவியா 9II 85-இன்ச் டிவி மாடல் ரூ.9,89,900 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சோனி பிராவியா 7II 55-இன்ச் டிவி மாடலும் ரூ.3,59,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony BRAVIA 9II 115 inch TV launched in india: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X