விஸ்வரூப டிவி.. 85 இன்ச் QLED டிஸ்பிளே.. IMAX என்ஹான்ஸ்டு.. Dolby விஷன்.. DTS ஆடியோ.. 32GB மெமரி.. எந்த மாடல்?
பிரீமியம் தியேட்டரில் இருக்கும் ஒட்டுமொத்த டெக்னாலஜிகளுடன் சோனி பிராவியா 9 சீரிஸ் (Sony BRAVIA 9 Series) மாடல்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு, டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, ஆட்டோ எச்டிஆர் டோன் மோப்பிங், 3டி சரவுண்ட் அப்ஸ்கேலிங், சப்வூப்பர், பீம் ட்வீடர், ஃபிரேம் ட்வீடர் என்று சொல்லிக்கொண்டே போகும்படி அத்தனை பிரீமியம் பீச்சர்களையும் கொண்டிருக்கிறது. இந்த பீச்சர்களுக்கு ஏற்ப மிடில்-கிளாஸ் மக்கள் கனவிலும் நினைக்க முடியாத விலையில் வருகிறது.
சோனி பிராவியா 9 சீரிஸ் அம்சங்கள் (Sony BRAVIA 9 Series Specifications): இந்த டிவியில் 75 இன்ச் மற்றும் 85 இன்ச் கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கொண்ட மாடல்கள் வருகின்றன. மினி எல்இடி (Mini LED) பேனல் வருகிறது. 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 (HDR10) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது.

மேலும், எக்ஸ்-வைடு ஆங்கிள் (X-Wide Angle), எக்ஸ்-ஆன்டி ரெஃப்ளெக்சன் (X-Anti Reflection), எச்எல்ஜி (HLG) மற்றும் ஹை-பீக் லூமினன்ஸ் (High-Peak Luminance) வருகிறது. இதுபோக எக்ஸ்ஆர் பேக்லைட் டிரைவ் (XR Backlight Master Drive), எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்ட் பூஸ்டர் 30 (XR Contrast Booster 30) மற்றும் டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Dynamic Contrast Enhancer) உள்ளது.
அதேபோல எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் (XR Clear Image) மற்றும் லைட்/கலர் சென்சார் (Light/Colour Sensor) உள்ளது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ரியல் வேல்ர்டு கலர்களில் அவுட்புட் கொடுக்க எக்ஸ்ஆர் டிரைலுமினோஸ் ப்ரோ (XR TRILUMINOS PRO) மற்றும் லைவ் கலர் டெக்னாலஜி (Live Colour Technology) கொண்டிருக்கிறது.
நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற பிரீமியம் ஓடிடிகளுக்காக சோனி பிக்சர் கோர் (SONY PICTURES CORE), பிரைம் வீடியோ காலிபிரேடட் மோட் (Prime Video Calibrated Mode) மற்றும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சப்போர்ட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக ஆட்டோ எச்டிஆர் டோன் மோப்பிங் (Auto HDR Tone Mapping), ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) வருகிறது.
மேலும், கேம் பீச்சர்கள் கன்ட்ரோலுக்காக பிரத்யேக கேம் மெனு வருகிறது. கெஸ்ச்சர் கன்ட்ரோல் (Gesture Controls) வருகிறது. எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி (XR Motion Clarity), ஆட்டோ மோட் (Auto Mode) போன்ற மோஷன் சப்போர்ட் உள்ளது. ஆடியோவை பார்க்கையில், 10W மற்றும் 5W அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர் செட்டப் கொண்டிருக்கிறது. சப்வூப்பர், பீம் ட்வீடர், ஃபிரேம் ட்வீடர் வருகின்றன.
அகஸ்டிக் மல்டி-ஆடியோ (Acoustic Multi-Audio), டால்பி ஆடியோ (Dolby Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் ஆடியோ (DTS Audio) சப்போர்ட் வருகிறது. இதுபோக ரூம் மற்றும் யூசர் போசிஷன் கம்பென்சேஷன் (Room & User Position Compensation), வாய்ஸ் ஜூம் (Voice Zoom 3) மற்றும் 3டி சரவுண்ட் அப்ஸ்கேலிங் (3D Surround Upscaling) பீச்சர்கள் வருகின்றன.
ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோவில் இந்த சோனி பிராவியா 9 சீரிஸ் மாடல்களை அடித்து கொள்ள முடியாது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் (Bluetooth), எச்ஐடி (HID), எச்ஒஜிபி (HOGP), எஸ்பிபி (SPP), டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) வருகிறது. அதேபோல ஈதர்நெட் (Ethernet), எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) மற்றும் பிராவியா சின்க் (BRAVIA SYNC) வருகிறது.
பிராவியா கேம் (BRAVIA Cam) வருகிறது. ஆகவே, கூகுள் மீட், வீடியோ காலிங் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) மற்றும் கூகுள் டிவி (Google TV) சப்போர்ட் வருகிறது. AI கொண்ட எக்ஸ்ஆர் ப்ராஸசர் (XR Processor) வருகிறது. பிரீமியம் ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச்ச் சப்போர்ட் உள்ளது. 32 ஜிபி மெமரி வருகிறது.
மேலும், பிரீமியம் பிராவியா டிவிகளில் வரும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-In), ஆப்பிள் ஏர் பிளே (Apple AirPlay), ஆப்பிள் ஹோம் கிட் (Apple HomeKit) வருகிறது. டார்க் சில்வர் (Dark Silver) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த டிவியின் 75 இன்ச் (75XR90) மாடலின் விலை ரூ.4,49,990ஆகவும், 85 இன்ச் (85XR90) மாடலின் விலை ரூ.5,99,990ஆகவும் இருக்கிறது.
சோனி சென்டர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விரைவில் விற்பனை தொடங்க இருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட டாப் மாடல் டிவியை வாங்க திட்டமிட்டவர்கள், கண்ணை மூடிக் கொண்டு இந்த சோனி பிராவியா 9 சீரிஸ் மாடல்களை வாங்கி கொள்ளலாம். விலைக்கு ஏற்ப பீச்சர்கள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








