Home
Gadgets

வாங்குனா இப்படி ஒரு TV வாங்கனும்.. 85 இன்ச் SONY பிராவியா டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களுடன் சோனி பிராவியா 9 II (Sony BRAVIA 9 II) மற்றும் சோனி பிராவியா 7 II (Sony BRAVIA 7 II) டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 55 இன்ச் முதல் 85 இன்ச் வரையில் மாடல்கள் இருக்கின்றன.

சோனி நிறுவனத்தின் பிராவியா டிவி மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஏனென்றால், மற்ற நிறுவனங்களைவிட பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை இந்த மாடல்கள் கொடுக்கின்றன. இதற்கு ஏற்ப ஆடியோவும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன. இதில் பிராவியா 9 II மற்றும் பிராவியா 7 II சேர்ந்துள்ளது.

வாங்குனா இப்படி ஒரு TV வாங்கனும்.. 85 இன்ச் SONY பிராவியா டிவி!

சோனி பிராவியா 9 II அம்சங்கள் (Sony BRAVIA 9 II Specifications): இதில் 75 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆர்ஜிபி எல்இடி (RGB LED) சப்போர்ட் கிடைக்கிறது. எக்ஸ்ஆர் ப்ராசஸர் மற்றும் எச்டிஆர்10 கிடைக்கிறது. மேலும், எச்எல்ஜி (HLG), டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.

லூமினன்ஸ் பூஸ்டர் ப்ரோ (Luminance Booster Pro), ஆர்ஜிபி டிரைலுமினாஸ் மேக்ஸ் (RGB Triluminos Max) மற்றும் எக்ஸ்-வைடு ஆங்கிள் ப்ரோ (X-Wide Angle Pro) கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு ஏற்ப 80W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. அகஸ்டிக் மல்டி-ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. மொத்தமாக 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் வாய்ஸ் ஜூம் 3 (Voice Zoom 3) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3டி சரவுண்ட் சவுண்ட் (3D Surround Sound) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் கிடைக்கிறது. குரோம்காஸ்ட், ஏர்பிளே உள்ளிட்டவை உள்ளன. 4 எச்டிஎம்ஐ, 2 யுஎஸ்பி, வை-பை மற்றும் ப்ளூடூத் உள்ளது.

சோனி பிராவியா 7 II அம்சங்கள் (Sony BRAVIA 7 II Specifications): 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் கொண்ட மாடல்கள் கிடைக்கின்றன. டிஸ்பிளே பீச்சர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆனால், ஆடியோவில் 40W அவுட்புட் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், 6 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

சோனி பிராவியா 9 II விலை (SONY BRAVIA 9 II Price): 75 இன்ச் மாடலின் மார்கெட் விலை ரூ.8,39,900 ஆக இருக்கிறது. ரூ.5,39,990 அறிமுக விலைக்கு கிடைக்க இருக்கிறது. 85 இன்ச் மாடலின் மார்கெட் விலை ரூ.9,89,900 ஆக இருக்கிறது. ரூ.6,69,990 அறிமுக விலைக்கு கிடைக்க இருக்கிறது.

சோனி பிராவியா 7 II விலை (SONY BRAVIA 9 II Price): 55 இன்ச் மாடலின் விலை ரூ.3,59,900 ஆக இருக்கிறது. ரூ.2,21,990 அறிமுக விலைக்கு கிடைக்கிறது. 65 இன்ச் மாடலின் விலை ரூ.4,39,900ஆக இருக்கிறது. ரூ.2,74,990 அறிமுக விலைக்கு கிடைக்கிறது. 75 இன்ச் மாடலின் விலை ரூ.6,19,900 ஆக இருக்கிறது.

ரூ.4,19,990 அறிமுக விலைக்கு கிடைக்க இருக்கிறது. டாப்-எண்ட் வேரியண்ட்டான 85 இன்ச் மாடலின் விலை ரூ.7,19,900 ஆக இருக்கிறது. ரூ.5,29,990 அறிமுக விலைக்கு கிடைக்க இருக்கிறது. சோனி நிறுவனத்தின் ஆன்லைன் தளத்திலும், ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Sony BRAVIA 9 II With 75 inch to 85 inch TVs Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X