65 இன்ச் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்த Sony.. டால்பி அட்மாஸ்.. டால்பி விஷன்.. என்ன விலை?
சோனி நிறுவனம் இந்தியாவில் சோனி பிராவியா 8 II கியூடி-ஒஎல்இடி டிவி சீரிஸ் (Sony Bravia 8 II QD-OLED TV series) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிகள் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்
சோனி பிராவியா 8 II கியூடி-ஒஎல்இடி டிவி சீரிஸ் அம்சங்கள் (Sony Bravia 8 II QD OLED TV Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்ட சோனி பிராவியா 8 II கியூடி-ஒஎல்இடி டிவி சீரிஸ் ஆனது 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு அளவுகளில் வாங்க கிடைக்கும். அதுவும் ஏஐ டெக்னாலஜி ஆதரவு கொண்ட எக்ஸ்ஆர் பிராசஸர் (XR Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் ஸ்டுடியோ கேலிப்ரேட்டட் மோட் (Studio Calibrated Mode) உள்ளது. இதன் மூலம் தரமான வீடியோக்களை பார்க்க முடியும். இதுதவிர நெட்பிளிக்ஸ் அடாப்டிவ் கேலிப்ரேட்டட் (Netflix Adaptive Calibrated), சோனி பிக்சர்ஸ் கோர் கேலிப்ரேட்டட் (Sony Pictures Core Calibrated), பிரைம் வீடியோ கேலிப்ரேட்டட் (Prime Video Calibrated) உள்ளிட்ட மோட்கள் இந்த சோனி டிவிகளில் உள்ளன.
சோனி பிராவியா 8 II கியூடி-ஒஎல்இடி டிவிகளில் உள்ள XR ட்ரைலுமினோஸ் மேக்ஸ் (XR Triluminos Max) ஆனது பில்லியன் கலர்களை வழங்குகிறது. மேலும் இது எந்தவொரு உள்ளடக்கத்தையும் கிட்டத்தட்ட 4K தரத்திற்குப் புத்திசாலித்தனமாக மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த டிவிகளின் மென்பொருள் வசதிக்கு அதகி கவனம் செலுத்தியுள்ளது சோனி நிறுவனம்.
ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) மற்றும் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் இரண்டிற்கும் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த இரண்டு புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல்கள். தெளிவான ஆடியோ மற்றும் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த டிவிகளை உருவாக்கியுள்ளது சோனி நிறுவனம்.
சோனி பிராவியா 8 II கியூடி-ஒஎல்இடி டிவி சீரிஸ் ஆனது ஓசு கான்ட்ராஸ்ட் பூஸ்டர் (XR Contrast Booster) ஆதரவு கொண்டுள்ளது. இது மேம்பட்ட பிக்சல் குவாலிட்டி வழங்குகிறது. அக்யூஸ்டிக் சர்ஃபேஸ் ஆடியோ+ (Acoustic Surface Audio+) ஆதரவு இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளதாக கூறப்படுகிறது. இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

4கே எச்டிஆர் ( 4K HDR), 4K ப்ளூ-ரே (4K Blu-ray) போன்ற டிஸ்பிளே அம்சங்களும் இந்த சோனி டிவிகளில் உள்ளன. மேலும் பிளேஸ்டேஷன் 5-க்கு தகுந்தபடி ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங்கைக் (Auto HDR Tone Mapping) கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் விஆர்ஆர்(VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன.
சோனி பிராவியா 8 II கியூடி-ஒஎல்இடி டிவி சீரிஸ் 55 இன்ச் மாடலின் விலை ரூ.2,46,990-ஆக உள்ளது. பின்பு இதன் 65 இன்ச் மாடலின் விலை ரூ.3,41,990 ஆக உள்ளது. சோனி ரீடெயில் ஸ்டோர்கள், ShopAtSC போன்ற தளங்களில் இந்த புதிய சோனி டிவிகளை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications