Home
Gadgets

இது வேற ரகம்..பிராவியா 7 சீரிஸ்.. IMAX என்ஹான்ஸ்.. DOLBY ஆடியோ.. 65 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 32 ஜிபி மெமரி, கூகுள் டிவி ஓஎஸ், 4K ரெசொலூஷன், எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி, டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர், லைவ் கலர் டெக்னாலஜி, பிராவியா கேம், ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் சோனி பிராவியா 7 மினி எல்இடி டிவி சீரிஸ் (Sony BRAVIA 7 Mini LED TV Series) மாடல்கள் களமிறங்கி இருக்கின்றன. இந்த மாடல்கள் குறித்த விவரங்கள் இதோ.

சோனி பிராவியா 7 மினி எல்இடி டிவி அம்சங்கள் (Sony BRAVIA 7 Mini LED TV Specifications): இந்த பிராவியா 7 மினி எல்இடி சீரிஸ் டிவிகளில் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் டிஸ்பிளே மாடல்கள் வருகிறது. கியூஎல்இடி (3840 x 2160 பிக்சல்கள்) பேனல் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இது வேற ரகம்..பிராவியா 7 சீரிஸ்.. IMAX என்ஹான்ஸ்.. DOLBY ஆடியோ டிவி!

மேலும், லோக்கல் டிம்மிங் (Local Dimming), 4K அப்ஸ்கேலிங், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சப்போர்ட் வருகிறது. எக்ஸ்ஆர் டிரிலுமினோஸ் ப்ரோ (XR TRILUMINOS PRO) மற்றும் லைவ் கலர் டெக்னாலஜி (Live Colour Technology) கொண்ட கலர் என்ஹான்ஸ்மென்ட் (Color Enhancement) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அதேபோல எக்ஸ்ஆர் பேக்லிட் மாஸ்டர் டிரைவ் (XR Backlight Master Drive), எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்ட் பூஸ்டு (XR Contrast Booster 20) மற்றும் டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Dynamic Contrast Enhancer) கொண்ட கான்ஸ்ட்ராய்டு என்ஹான்ஸ்மென்ட் (Contrast Enhancement) உள்ளது. எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் (XR Clear Image) கொண்ட கிளாரிட்டி என்ஹான்ஸ்மென்ட் வருகிறது.

ஆகவே, டிஸ்பிளேவில் அல்ட்ரா பிரீமியம் குவாலிட்டி எதிர்பார்க்கலாம். இதுபோக எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி (XR Motion Clarity), ஆட்டோ மோட் எச்டிஆர் (Auto Mode
HDR), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. விவிட், சினிமா, ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு போன்ற மோட்கள் வருகின்றன.

இந்த சோனி டிவியில் எக்ஸ்ஆர் ப்ராசஸர் (XR Processor) வருகிறது. ஆடியோவை பார்க்கையில், 10W + 10W ஃபுல் ரேஞ்ச் பேஸ் ரெப்லெக்ஸ் அவுட்புட் மற்றும் 10W + 10W ட்வீடர் அவுட்புட் வருகிறது. டால்பி ஆடியோ (Dolby Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) டிடிஎஸ் (DTS), வாய்ஸ் ஜூம் 3 (Voice Zoom 3) மற்றும் 3டி சரவுண்ட் அப்ஸ்கேலிங் (3D Surround upscaling) வருகிறது.

பிராவியா கேம் (BRAVIA Cam) வருகிறது. ஆகவே, வீடியோ கால்கள் செய்து கொள்ளலாம். கேமிங் பீச்சர்களை பார்க்கையில், (Auto HDR Tone Mapping), கேம் மோட் (Game Mode) ஃபர் பிளேஸ்டேஷன் 5 (PlayStation 5), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் விஆர்ஆர் (VRR) சப்போர்ட் வருகிறது.

ஆண்ட்ராய்டு டிவி, ஸ்மார்ட் டிவி மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர், குரோம்காஸ்ட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். 32 ஜிபி மெமரி வருகிறது. ஈதநெட், ஆர்எப், 2 யுஎஸ்பி போர்ட், 4 எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.

வை-பை (Wi-Fi), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) வருகிறது. ஈகோ டாஸ்போர்ட் (Eco Dashboard), ஏர்பிளே 2 (AirPlay 2) மற்றும் ஹோம்கிட் (HomeKit) ஆகிய ஸ்மார்ட் பீச்சர்கள் வருகின்றன. இந்த டிவியின் 55 இன்ச் (K-55XR70) மாடலின் விலை ரூ.1,82,990ஆகவும், 65 இன்ச் (K-65XR70) மாடலின் விலை ரூ.2,29,990ஆகவும் இருக்கிறது.

75 இன்ச் (K-75XR70) மாடலின் விலை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆகவே, 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விற்பனை சோனி சென்டர்கள் மற்றும் ஸ்டோர்களில் தொடங்கிவிட்டது. இன்று முதல் இந்த சோனி பிராவியா 7 மினி எல்இடி டிவி சீரிஸ் மாடல்களை வாங்கி கொள்ளலாம். பிரீமியம் டிவி பிரியர்களுக்கு இந்த மாடல்கள் நல்ல ஆப்ஷனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony BRAVIA 7 Mini LED TV Series With IMAX Enhanced, Dolby Audio Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X