Home
Gadgets

இனி வீடே சினிமா தியேட்டர் .. 98 இன்ச் Mini LED டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட் டிவி மார்கெட்டில் பிரீமியம் மற்றும் குவாலிட்டியான தயாரிப்புகளுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இந்த வரவேற்புக்கு ஏற்ப சோனி (Sony) நிறுவத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிராவியா 7 II (BRAVIA 7 II) 4கே மினி எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

மினி தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும்படியான டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களை இந்த சீரிஸ் கொண்டுள்ளது. ட்ரூ ஆர்ஜிபி (True RGB) தொழில்நுட்பம் கொண்ட இந்த சோனி பிராவியா 7 II சீரிஸில் 55 இன்ச் முதல் 98 இன்ச் வரையில் மொத்தம் 5 மாடல்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன.

இனி வீடே சினிமா தியேட்டர் .. 98 இன்ச் Mini LED டிஸ்பிளே.. எந்த மாடல்?

டிஸ்பிளே & வீடியோ (Display & Video):
ட்ரூ ஆர்ஜிபி பேக்லைட் மாஸ்டர் டிரைவ் ப்ரோ (True RGB Backlight Master Drive Pro) தொழில்நுட்பம் கிடைக்கிறது. ஆகவே, இந்த டிவியின் மினி எல்இடிகள் வழியாக பிரைட்னஸ் (Brightness) மற்றும் டீப்பர் பிளாகுகள் (Deeper Blacks) டார்க் காட்சிகளிலும் பிரீமியம் அவுட்புட்டை கொடுக்கும்.

எக்ஸ்ஆர் ட்ரிலுமினோஸ் மேக்ஸ் (XR Triluminos Max):
பில்லியன் கணக்கான கலர் டெப்த்களுடன் மிகவும் நேச்சுரல் டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கும். ஆகவே, நேரடியாக கண்களில் பார்க்கும்போது கிடைக்கும் துல்லிய அனுபவத்தை இந்த டிஸ்பிளேவில் எதிர்பார்க்க முடியும். இது மினி தியேட்டர் அளவுக்கு டிஸ்பிளே குவாலிட்டியை கொடுக்கும்.

காக்னிட்டிவ் பிராசஸர் எக்ஸ்ஆர் (Cognitive Processor XR):
இது சோனியின் மிகவும் பிரீமியமான பிராசஸராகும். மனித மூளை எவ்வாறு சீன்களையும், ஆடியோக்களையும் உள்வாங்குகிறதோ, அதேபோல டிஸ்பிளேவில் தோன்றும் சீன்கள் மற்றும் ஆடியோக்களை ரியல்டைமில் (Real-time) பகுப்பாய்வு செய்து, கான்ட்ராஸ்ட், ஷார்ப்னஸ் (Sharpness) உள்ளிட்டவையை என்ஹான்ஸ் செய்கிறது.

மினி தியேட்டர் அனுபவம்:
வீட்டில் இருந்தபடியே தியேட்டர் உணர்வை பெற டால்பி விஷன் (Dolby Vision), ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) மற்றும் நெட்ஃபிலிக்ஸ் அடாப்டிவ் காலிபிரேட்டட் மோட் (Netflix Adaptive Calibrated Mode) உள்ளிட்ட பீச்சர்களுடன் இந்த சோனி பிராவியா 7 II சீரிஸ் டிவி மாடல்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.

ஆடியோ டெக்னாலஜி (Audio Technology):
டிஸ்பிளேவுக்கு இணையாக ஆடியோவிலும் சோனி நிறுவனம் பீச்சர்களை கொடுக்கிறது. இந்த டிவியில் அகௌஸ்டிக் மல்டி-ஆடியோ+ (Acoustic Multi-Audio+) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது டிஸ்பிளேவின் பின்புறம் உள்ள ஸ்பீக்கர்கள் மூலம், சீன்களில் எங்கு சவுண்ட் ஏற்படுகிறதோ அங்கிருந்தே சத்தம் வருவது போன்ற ஒரு ஆடியோ உணர்வை கொடுக்கும்.

மேலும், 40W ஆடியோ வருகிறது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) சப்போர்ட் கொண்ட 3டி சரவுண்ட் சவுண்ட் சப்போர்ட் கிடைக்கிறது. இதில் உள்ள வாய்ஸ் ஜூம் 3 (Voice Zoom 3) என்ற ஏஐ (AI) தொழில்நுட்பம், பேக்கிரவுண்ட் நாய்ஸ் அதிகமாக இருக்கும் நேரத்தில் உரையாடல்களை (Dialogues) மட்டும் தனியாக பிரித்து மிக தெளிவாக கேட்க செய்கிறது.

கேமிங் & ஸ்மார்ட் அம்சங்கள் (Gaming & Smart TV Features):
கேமிங் பிரியர்களுக்காக குறிப்பாக பிளேஸ்டேஷன்5 (PlayStation 5) கேமர்களுக்காக பிரத்யேக அம்சங்கள் உள்ளன. 4K 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஎம்ஐ 2.1 (HDMI 2.1) போர்ட்கள், ஸ்மூத கேமிங்கிற்கான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) மற்றும் ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கிறது. ஓடிடி ஆப்கள் உள்பட 10,000+ ஆப் சப்போர்ட் கொடுக்கிறது. ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple AirPlay 2) மற்றும் ஹோம் கிட் (HomeKit) சப்போர்ட் உள்ளது. உள்ளது. ஜெமினி (Gemini) அசிஸ்டன்ட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ரிமோட்டை கொடுத்து இருக்கிறது.

சோனி பிராவியா 7 II விலை:
55 இன்ச் மாடலின் விலை ரூ.3,59,900ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.2,21,990 விலைக்கு கிடைக்கிறது. 65 இன்ச் மாடலின் விலை ரூ.4,39,900ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.2,74,990 விலைக்கு கிடைக்கிறது. மே 28ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். 75 இன்ச், 85 இன்ச், 98 இன்ச் மாடல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க இருந்கின்றன. சோனி தளத்தில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Sony BRAVIA 7 II 4K RGB Mini LED TVs Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X