Home
Gadgets

SONY ஒரே போடு.. 85 இன்ச் Mini LED டிவி.. IMAX என்ஹான்ஸ்டு.. டால்பி விஷன் வீடியோ.. PS5-க்கு பக்கா மாடல்!

இந்திய மார்கெட்டில் இருக்கும் பிரீமியம் டிவி பிரியர்கள் மற்றும் பிஎஸ்5 கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான பீச்சர்களுடன் சோனி பிராவியா 5 சீரிஸ் (Sony BRAVIA 5 Series) மினி எல்இடி டிவிகள் களமிறங்கி இருக்கின்றன. அல்ட்ரா பிரீமியமாக இருப்பதால், விலையும் மூக்கில் விரல் வைக்கும்படி அதிகமாகவே இருக்கிறது. சினிமாடிக் அனுபவம் கொடுக்கும்படி டால்பி விஷன், டால்பி அட்மோஸ், டிடிஎஸ்எக்ஸ் மட்டுமல்லாமல், ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு, எக்ஸ்ஆர் டைட்டானியம் ப்ரோ போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சோனி டிவிகள் என்றாலே, பிரீமியம் குவாலிட்டி கொடுக்கும் என்று பல கஸ்டமர்கள் சொல்வதை பாரத்திருப்போம். அதற்கு ஏற்ப விலையும் கூடுதலாகவே இருக்கும். ஆனால், பீச்சர்களில் குறை சொல்லிவிட முடியாது. பிரீமியம் கேமிங் மற்றும் சினிமாடிக் அனுபவம் எதிர்பார்க்கும் கஸ்டமர்களை பிடிக்கும்படி இந்த பிராவியா 5 எக்ஸ்ஆர் மினி எல்இடி டிவிகளை வந்துள்ளன.

SONY ஒரே போடு.. 85 இன்ச் Mini LED டிவி.. IMAX என்ஹான்ஸ்டு.. மாடல்?

சோனி பிராவியா 5 சீரிஸ் அம்சங்கள் (Sony BRAVIA 5 Series Specifications): இந்த பிராவியா டிவியில் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடல்கள் இருக்கின்றன. மினி எல்இடி (Mini LED) பேக்லைட் மற்றும் லோக்கல் டிம்மிங் டிஸ்பிளே கொடுக்கிறது. 4K அல்ட்ரா எச்டி (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

நேச்சுரல் வீடியோ அனுபவம் கொடுக்கும்படியான பில்லியன் கலர் அக்யூரசிக்காக எக்ஸ்ஆர் ட்ரைலூமினோஸ் ப்ரோ (XR Triluminos Pro) கிடைக்கிறது. அதேபோல பிரைட்னஸ் கன்ட்ரோல், பிளாக் லெவல் கன்ட்ரோலுக்காக எக்ஸ்ஆர் கான்ட்ராஸ்டு பூஸ்ட் 10 (XR Contrast Booster 10) கிடைக்கிறது. கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் (XR Clear Image) கிடைக்கிறது.

இதேபோல ஸ்போர்ட்ஸ், ரேசிங் போன்ற ஃபாஸ்ட் மூவிங் சீன்களை என்ஹான்ஸ் செய்வதற்காக எக்ஸ்ஆர் மோஷன் கிளாரிட்டி (XR Motion Clarity) கிடைக்கிறது. இது வீடியோக்களுக்கு கிடைக்கிறது. அப்படியே ஆடியோ பீச்சர்களை பார்த்தால், ஸ்பாஷியல் ஆடியோ, சவுண்ட் போசிஷனிங் போன்றவற்றுக்காக அகவுஸ்டிக் மல்டி-ஆடியோ (Acoustic Multi-Audio) சப்போர்ட் கிடைக்கிறது.

இதுபோக வாய்ஸ் ஜூம் 3 (Voice Zoom 3) பீச்சர் கிடைக்கிறது. இது வாய்ஸ்களின்போது என்ஹான்ஸ் செய்யப்பட்டு அவுட்புட் கொடுக்கப்படும். பிஎஸ்5 பிரியர்களுக்கான பீச்சர்களையும் இந்த சோனி பிராவியா 5 சீரிஸ் கொடுக்கிறது. ஆட்டோ டோன் எச்டிஆர் டோன் மேப்பிங் (Auto HDR Tone Mapping), ஆட்டோ கேம் பிக்சர் மோட் (Auto Game Picture Mode) வருகிறது.

பிரத்யேக கேம் மெனு 2 (Game Menu 2) கிடைக்கிறது. இதுபோக வழக்கமாக கிடைக்கும் ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) மற்றும் விஆர்ஆர் (VRR) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. டால்பி விஷன், எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி பீச்சர்களும் வருகின்றன. 40W ஆடியோ அவுட் கிடைக்கிறது. 10W ஸ்பீக்கர்கள் 4 கிடைக்கின்றன. ஆடியோவிலும் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது.

ஆகவே, டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ், டிடிஎஸ்:எக்ஸ் மற்றும் டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் சப்போர்ட் உள்ளது. இதுபோக 3டி சரவுண்ட் அப்ஸ்கேலிங் வருகிறது. எக்ஸ்ஆர் ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் + கூகுள் டிவி இன்டர்பேஸ் கிடைக்கிறது. ஆகவே, பிளே ஸ்டோர் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற கூகுள் பீச்சர்கள் வருகின்றன. ஆப்பிள் ஏர்பிளே, ஹோம் கிட் சப்போர்ட் உள்ளது.

சோனி பிராவியா 5 சீரிஸ் விலை (Sony BRAVIA 5 Series Price): 55 இன்ச் டிவியின் (K-55XR55A மாடல்) விலை ரூ.1,37,740ஆகவும், 65 இன்ச் டிவியின் (K-65XR55A மாடல்) விலை ரூ.1,73,840ஆகவும் இருக்கிறது. அதேபோல 75 இன்ச் டிவியின் (K-75XR55A மாடல்) விலை ரூ.2,84,990ஆகவும், 85 இன்ச் டிவியின் (K-85XR55A மாடல்) விலை ரூ.4,17,990ஆகவும் இருக்கிறது. இந்த விலையுடன் சோனி சென்டர்கள் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Sony BRAVIA 5 Series With PS5 Enhancements Launched India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X