Home
Gadgets

98 இன்ச் சோனி பிராவியா 5 மினி எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்.. தலைசுற்ற வைக்கும் விலை..

சோனி நிறுவனம் 98-இன்ச் சோனி பிராவியா 5 மினி எல்இடி டிவி (98 inch Sony Bravia 5 Mini LED TV) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

98-இன்ச் சோனி பிராவியா 5 மினி எல்இடி டிவி அம்சங்கள் (98 inch Sony Bravia 5 Mini LED TV Specifications) : தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 98-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி டிஸ்பிளே சதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840×2160 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக 4கே டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

98 இன்ச் சோனி பிராவியா 5 மினி எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்..

இதுதவிர எச்டிஅர் 10, எச்எல்ஜி, டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த 98-இன்ச் சோனி பிராவியா 5 மினி எல்இடி டிவி மாடலில் உள்ளது. மேலும் எக்ஸ்ஆர் பேக்லைட் மாஸ்டர் டிரைவ் (XR Backlight Master Drive) அம்சம் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. பின்பு மேம்பட்ட பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) இந்த டிவியில் உள்ளது.

சூரிய உதயங்கள் போன்ற சிக்கலான லைட்டிங் சூழ்நிலைகளில் கூட இந்த டிவியில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் காக்நிட்டிவ் ப்ராசஸர் எக்ஸ்ஆர் (Cognitive Processor XR) ஆதரவுடன் 98-இன்ச் சோனி பிராவியா 5 மினி எல்இடி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் இந்த 98-இன்ச் சோனி டிவியில் உள்ளது. மேலும் 40W அக்யூஸ்டிக் மல்டி-ஆடியோ ஸ்பீக்கர் (40W Acoustic Multi-Audio speaker)அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

அடாப்டிவ் கேலிப்ரேட்டட் (Netflix Adaptive Calibrated), சோனி பிக்சர்ஸ் கோர் கேலிப்ரேட்டட் (Sony Pictures Core Calibrated), பிரைம் வீடியோ கேலிப்ரேட்டட் (Prime Video Calibrated) உள்ளிட்ட பல மோட்கள் உள்ளன. குறிப்பாக இவை லைலவ் ஸ்போர்ட்ஸ் வீடியோ மற்றும் பல ஓடிடி வீடியோக்களை துல்லியமாகப் பார்க்க உதவுகிறது.

இந்த 98-இன்ச் டிவியில் உள்ள சோனி பிக்சர்ஸ் கோர் சேவை ஆனது IMAX மற்றும் 4K ப்ளூ-ரே தரத்தில் வீடியோ பார்க்க அனுமதிக்கிறது. வைஃபை 6, புளூடூத் 5.3, நான்கு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சோனி ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த டிவியில் கூகுள் டிவி (Google TV) ஓஎஸ் வசதி உள்ளது. எனவே இந்த டிவியில் மேம்பட்ட பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

98-இன்ச் சோனி பிராவியா 5 மினி எல்இடி டிவி மாடலின் விலை ரூ.6,49,990-ஆக உள்ளது. சோனி சென்டர்ஸ், சோனி எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர் உள்ளிட்ட சில தளங்களில் இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Bravia 5 98 inch Mini LED TV series launched in india: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X