100-இன்ச் டிவியை அறிமுகம் செய்த சோனி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மாஸ்.. எச்டிஆர் 10.. என்ன விலை?
சோனி நிறுவனம் இந்தியாவில் 100 இன்ச் கொண்ட சோனி பிராவியா 3II டிவியை (Sony BRAVIA 3II 100 inch TV) அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சோனி ஸ்மார்ட் டிவி வெளியாகி உள்ளது. இப்போது இந்த 100-இன்ச் சோனி ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சோனி பிராவியா 3II 100 இன்ச் டிவி அம்சங்கள் (Sony BRAVIA 3II 100 inch TV Specifications): 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (4K X-Reality PRO) டெக்னாலஜி, 4கே ப்ளூ-ரே குவாலிட்டி( 4K Blu-ray quality) போன்ற அம்சங்களுடன் இந்த சோனி 100 இன்ச் டிவி வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

டால்பி விஷன், டால்பி விஷன் கேமிங், எச்டிஆர் 10 போன்ற தனித்துவமான டிஸ்பிளே அம்சங்கள் இந்த 100 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அதேபோல் எக்ஸ்ஆர் ட்ரிலுமினோஸ் ப்ரோ(XR Triluminos Pro) தொழில்நுட்ப வசதியும் இதில் உள்ளது. இது பில்லியன் கணக்கான கலர் டெப்த்களுடன் மிகவும் நேச்சுரல் டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும். ஆகவே, நேரடியாகக் கண்களில் பார்க்கும்போது கிடைக்கும் துல்லிய அனுபவத்தை இந்த டிஸ்பிளேவில் எதிர்பார்க்க முடியும்.
எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் (XR Clear Image) ஆதரவும் இந்த 100 இன்ச் டிவியில் உள்ளது. இது டிவியில் நாம் பார்க்கும் காட்சிகளின் தரம் மற்றும் தெளிவை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல் இந்த டிவியில் மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர் தொழில்நுட்பம் (Motionflow XR technology) கூடுதல் பிரேம்களை (Extra Frames) சேர்க்கிறது.
குறிப்பாக ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சப்போர்ட் கொண்டுள்ளது சோனி பிராவியா 3II 100 இன்ச் டிவி மாடல். மேலும் இந்த சோனி ஸ்மார்ட் டிவியின் கேமிங் வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோடு (ALLM) போன்ற தனித்துவமான கேமிங் அம்சங்கள் இந்த சோனி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. பின்பு எச்டிஎம்ஐ 2.1 வழியாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)-இல் 4கே கேமிங்கை ஆதரிக்கிறது இந்த சோனி ஸ்மார்ட் டிவி.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் சோனி பிராவியா 3II 100 இன்ச் டிவி மாடல் இயங்குகிறது. அதுவும் இந்த டிவி ஓடிடி ஆப்கள் உள்பட 10,000+ ஆப் சப்போர்ட் கொடுக்கிறது. ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple AirPlay 2) மற்றும் ஹோம் கிட் (HomeKit) சப்போர்ட் உள்ளது. உள்ளது. ஜெமினி (Gemini) அசிஸ்டன்ட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட்உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சோனி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
சோனி நிறுவனத்தின் எக்ஸ்ஆர் ப்ராசஸர் (Sony's XR Processor) உடன் சோனி பிராவியா 3II 100 இன்ச் டிவி வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டிவியில் உள்ளன.

சோனி பிராவியா 3II 100 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.4,99,990-ஆக உள்ளது. சோனி சென்டர் மற்றும் சோனி எக்ஸ்க்ளூசிவ், www.ShopatSC.com போர்டல், முன்னணி எலக்ட்ரானிக் விற்பனை நிலையங்கள் மற்றும் முக்கிய இ-காமர்ஸ் தளங்களிலும் இந்த 100 இன்ச் டிவி வாங்க கிடைக்கிறது. இந்த 100 இன்ச் டிவி உடன் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85 மாடல்களும் வெளியாகி உள்ளன. இவற்றின் விலை இப்போது பார்க்கலாம்.
சோனி பிராவியா 3II டிவி சீரிஸ் விலை
சோனி பிராவியா 3II 55 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.99,990-ஆக உள்ளது.
சோனி பிராவியா 3II 65 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,24,900-ஆக உள்ளது
சோனி பிராவியா 3II 75 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,79,900-ஆக உள்ளது
சோனி பிராவியா 3II 85 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.3,05,900-ஆக உள்ளது


Click it and Unblock the Notifications
