Home
Gadgets

வாங்குனா இந்த SONY டிவிதான்.. 85 இன்ச் டிவி.. 4K டிஸ்பிளே.. டால்பி விஷன்.. டால்பி அட்மோஸ்.. பேஸ் ஸ்பீக்கர்கள்!

பிரீமியம் டிவி வாங்கனும்னா, இந்த டிவிய தான் வாங்கனும் என்று சொல்லும் அளவுக்கு 4K எச்டிஆர் ரெசொலூஷன், டால்பி விஷன், 4K எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ, மோஷன்ப்ளோ எக்ஸ்ஆர் 200, டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் போன்ற டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட பேஸ் ரெஃபெளக்ஸ் மற்றும் எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர்களுடன் சோனி பிராவியா 3 சீரிஸ் (Sony BRAVIA 3 Series) டிவிகள் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த விவரம் இதோ.

சோனி பிராவியா 3 சீரிஸ் அம்சங்கள் (Sony BRAVIA 3 Series Specifications): இந்த பிராவியா மாடலானது, ஃப்ளஷ் சர்பேஸ் டிசைன் (Flush Surface Design) கொண்டிருக்கிறது. 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் ஆகிய டிஸ்பிளே வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் வருகிறது.

வாங்குனா இந்த டிவிதான்.. 85 இன்ச் டிவி.. 4K டிஸ்பிளே.. டால்பி ஆடியோ!

50Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபிரேம் டிம்மிங் (Frame Dimming) மற்றும் லைட் சென்சார் (Light Sensor) சப்போர்ட் வருகிறது. எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), டால்பி விஷன் (Dolby Vision), டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Dynamic Contrast Enhancer) மற்றும் டிரிலுமினோஸ் புரோ (TRILUMINOS PRO) பீச்சர்கள் வருகின்றன.

மேலும், 4K எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (X-Reality PRO) மற்றும் மோஷன்ப்ளோ எக்ஸ்ஆர் 200 (Motionflow XR 200) போன்ற கலர் டெக்னாலஜி கொண்டிருக்கிறது. இதுபோக விவிட், ஸ்டான்டர்ட், சினிமா, கேம், கிராபிக்ஸ் உள்ளிட்ட பிக்சர் மோட்கள் வருகின்றன. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி டிஸ்பிளே அனுபவம் எதிர்பார்க்கலாம்.

இந்த சோனி பிராவியா மாடலில் 4K எச்டிஆர் ப்ராசஸர் எக்ஸ்1 (HDR Processor X1) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர், குரோம்காஸ்ட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட கூகுள் சப்போர்ட் கிடைக்கிறது. பிராவியா டிவிகள் ஆடியோ பீச்சர்களில் எப்போதும் மிரளவிடும்.

இந்த பிராவியா 3 சீரிஸ் மாடல்களிலும் அதையே பார்க்க முடிகிறது. 10W + 10W பேஸ் ரெஃபெளக்ஸ் ஸ்பீக்கர் (Bass Reflex Speaker) மற்றும் எக்ஸ்-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் (X-Balanced Speaker) வருகிறது. ஆகவே, 2 பிரீமியம் ஸ்பீக்கர் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதுபோக டால்பி ஆடியோ (Dolby Audio) வருகிறது.

மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. இந்த டிவியில் 16 ஜிபி மெமரி வருகிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3), எச்ஐடி (HID), எச்ஓஜிபி (HOGP), எஸ்பிபி (SPP), டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. இதுபோக போர்ட்கள் சப்போர்ட் உள்ளது.

ஈதர்நெட் (Ethernet), ஐஎப் இன் (IF In), ஆர்எப் இன் (RF In), டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio Out), 4 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட்கள், 2 யுஎஸ்பி (USB) போர்ட்கள் வருகின்றன. பிராவியா சிங்க் (BRAVIA SYNC) சப்போர்ட் உள்ளது. மேலும், ஈகோ டாஸ்போர்ட், ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம் கிட் போன்ற பீச்சர்கள் வருகின்றன.

கேமிங் பிரியர்களுக்காக ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங், ஆட்டோ ஜெர்ன் பிக்சர் மோட், ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் வருகிறது. பிளாக் கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த சோனி டிவியின் 55 இன்ச் (K-55S30) மாடலின் விலை ரூ.93,990ஆகவும், 65 இன்ச் (K-65S30) மாடலின் விலை ரூ.1,21,990ஆகவும் இருக்கிறது.

மேலும், 43 இன்ச், 50 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல் டிவிகளில் விலை விவரங்கள் வெளியாகவில்லை. வரும் நாட்களில் சோனி இந்தியா நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்த டிவிகள் சோனி சென்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர்கள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. பிரீமியம் டிவி பிரியர்களுக்கு இந்த மாடல்கள் பக்கா தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony BRAVIA 3 Series Launched in India With Dolby Vision, Atmos Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X