Home
Gadgets

மே.24 மார்கெட் மிரளும்.. மோஷன்ப்ளோ வீடியோ.. டால்பி ஆடியோ.. 4K ரெசொலூஷன்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, எக்ஸ்1 பிராசஸர், கூகுள் டிவி ஓஎஸ், 16ஜிபி மெமரி மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ, கேமிங் பிரியர்களுக்கான ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங், லோவ் லேட்டன்சி மோட் போன்ற பீச்சர்களுடன் சோனி பிராவியா 2 சீரிஸ் வெளியாகியிருக்கிறது.

சோனி பிராவியா 2 சீரிஸ் அம்சங்கள் (Sony Bravia 2 Series Specifications): இந்த பிராவியா 2 சீரிஸ் டிவியில் எஸ்20 மற்றும் எஸ்25 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, 43 இன்ச் மற்றும் 50 இன்ச் மாடல்கள் எஸ்20 வேரியண்ட் கீழும், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்கள் எஸ்25 வேரியண்ட் கீழும் வருகிறது.

மே.24 மார்கெட் மிரளும்.. மோஷன்ப்ளோ வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த டிவி?

இந்த பிராவியா டிவிகள் நாரோவ் பெசல் (Narrow Bezel) டிசைனில் பிளாக் கலரில் (Black Color) கிடைக்க இருக்கிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 4K ரெசொலூஷன் (3840 x 2160 பிக்சல்கள்), 50Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

4K எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (X-Reality PRO) பிக்சர் டெக்னாலஜி கொண்ட 4K ப்ராசஸர் எக்ஸ்1 (Processor X1) வருகிறது. இந்த ப்ராசஸரானது, ஸ்மூத் மற்றும் நேச்சுரல் வீடியோ அவுட்புட் கொடுக்கும் மோஷன்ப்ளோ எக்ஸ்ஆர் 200 (Motionflow XR 200) மற்றும் லைவ் கலர் டெக்னாலஜி (Live Colour Technology) கொண்டுள்ளது.

அதேபோல டைனாமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Dynamic Contrast Enhancer) வருகிறது. இந்த சோனி பிராவியா 2 சீரிஸ் மாடல்களின் ஆடியோவை பார்க்கையில், 10W + 10W ஸ்பீக்கர்கள் வருகின்றன. இதுவொரு ஓப்பன் பாஃபில் ஸ்பீக்கர் (Open Baffle Speaker) மாடலாகும். டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது.

மே.24 மார்கெட் மிரளும்.. மோஷன்ப்ளோ வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த டிவி?

கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஏஎல்எல்எம் (ALLM), ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங் (Auto HDR Tone Mapping) மற்றும் ஆட்டோ ஜென்ர் பிக்சர் மோட் (Auto Genre Picture Mode) கொண்டிருக்கிறது. வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) வயர்லெஸ் கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த சோனி பிராவியா 2 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர், பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), எகோ டாஸ்போர்ட் (Eco Dashboard), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் வருகிறது. 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

ஆப்பிள் ஏர்பிளே (Apple Airplay), ஆப்பிள் ஹோம்கிட் (Apple HomeKit) வருகிறது. இந்த பிராவியா 2 சீரிஸ் மாடல்களின் வயர்டு கனெக்டிவிட்டிகளை பார்க்கையில், 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 1 டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் (Digital Audio Output) கொண்டிருக்கிறது.

ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) வருகிறது. 55 இன்ச் டிவியின் எடை 13.9ஆகவும், 65 இன்ச் டிவியின் எடை 21.4ஆகவும் இருக்கிறது. அதேபோல 55 இன்ச் டிவியின் விலை ரூ.95,990ஆகவும், 65 இன்ச் டிவியின் விலை ரூ.74,990ஆகவும் இருக்கிறது. இந்த டிவிகள் மே 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன.

50 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகளின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகவில்லை. ஆகவே, 55 மற்றும் 65 இன்ச் டிவிகளை மே 24ஆம் தேதி முதல் சோனி சென்டர்கள் மற்றும் இ-காமர்ஸ் சைட்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விரைவில் விற்பனை தொடங்கும்.

Best Mobiles in India

English summary
Sony Bravia 2 Series With 4K Processor, Dolby Audio Available From May 24 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X