ஓல்டு டிவி அம்பேல்.. ரூ.6,000 ஆஃபரில் 50 இன்ச் SONY டிவி.. 4K அல்ட்ரா எச்டி.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?
சோனி பிராவியா 2 II 50 இன்ச் 4கே கூகுள் டிவி (SONY BRAVIA 2 II 50 inch 4K Google TV) மாடலுக்கு பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேலில் (Flipkart Republic Day Sale) டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி, கூகுள் டிவி ஓஎஸ், டால்பி அட்மோஸ், சோனி எக்ஸ்2 4கே ப்ராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவியின் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் சோனி பிராவியா 2 II 50 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் (SONY BRAVIA 2 II 50 inch 4K Google TV 2025 Edition) மாடலுக்கு 28 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.51,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.6,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு இஎம்ஐ ஆப்ஷனில் வாங்க வேண்டும்.

முழு தொகையை கொடுத்து வாங்கினால், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.5,750 டிஸ்கவுண்ட் கிடைக்கும். மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். ரூ.6,000 டிஸ்கவுண்ட் பெற்றால், ரூ.45,990 விலைக்கு இந்த சோனி பிராவியா 2 II 50 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி இந்த டிவிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
சோனி பிராவியா 2 II 50 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (SONY BRAVIA 2 II 50 inch 4K Google TV Specifications): சோனி எக்ஸ்1 4கே ப்ராசஸர் (SONY X1 Processor) கொடுக்கப்பட்டு உள்ளது. எக்ஸ் புரொடெக்சன் ப்ரோ (X Protection Pro), கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. மேலும், 4கே எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ (4K X Reality PRO), மோஷன் ப்ளோவ் எக்ஸ் 100 (Motion Flow XR 100) உள்ளது.
4கே என்ஹான்ஸ்மெண்ட் மற்றும் ஃபாஸ்ட்-பேஸ்ட் சீன்களில் பிளர் கன்ட்ரோல் கொடுக்க இந்த பீச்சர்கள் கிடைக்கின்றன. லைவ் கலர் (Live Color), ஏஎல்எல்எம் (ALLM) கொண்டுள்ளது. 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சோனி பிராவியா 2 II 50 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் உள்ளது.
60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 4கே எச்டிஆர் (4K HDR), எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) கொடுக்கப்பட்டு உள்ளது. 20 W ஆடியோ அவுட் கொண்ட ஓப்பன் பாஃப்ல் ஸ்பீக்கர் (Open Baffle Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி ஆடியோ (Dolby Audio) கொண்டுள்ளது. மேலும், டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் (DTS Digital Surround) உள்ளது.
டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) கொண்டுள்ளது. கூகுள் ஓஎஸ் கொண்டுள்ளதால், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளது. ஆப்பிள் டிவி (Apple TV), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களையும் கொடுத்துள்ளது.
மேலும், அலெக்சா, ஆப்பிள் ஏர்பிளே 1 (Apple AirPlay 2) மற்றும் ஆப்பிள் ஹோம்கிட் (Apple HomeKit) கொண்டுள்ளது. 4 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), ப்ளூடூத் மற்றும் வை-பை கொடுத்துள்ளது. K-50S22BM2 மாடல் மற்றும் BRAVIA 2 II சீரிஸ் கீழ் கிடைக்கும் மாடலாக இந்த சோனி பிராவியா 2 II 50 இன்ச் 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் வருகிறது.


Click it and Unblock the Notifications








