வீட்டுக்கு 1 ஆர்டர்.. 44 சதவீத தள்ளுபடி.. 65 இன்ச் 4K LED டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடந்துவரும் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026 (Great Freedom Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையில் சோனி 65 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் (Sony 65 inch BRAVIA 2M2 Series TV) மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், கூகுள் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், 4கே எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ, டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது.
இப்போது, அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேலில் சோனி 65 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் அல்ட்ரா எச்டி கூகுள் டிவி (Sony 65 inch BRAVIA 2M2 Series 4K Ultra HD Google TV) மாடலுக்கு 44 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.78,839 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,500 தள்ளுபடி பெற்று கொள்ளலாம்.

ஆகவே, ரூ.74,339 விலைக்கு கிடைக்கும். இதுபோக 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. இந்த சலுகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.6000 தள்ளுபடி கொடுக்கப்பட்டுகிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த சோனி 65 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் அல்ட்ரா எச்டி கூகுள் டிவி மாடலை வாங்கி கொள்ளலாம்.
சோனி 65 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் டிவி அம்சங்கள் (Sony 65 inch BRAVIA 2M2 Series TV Specifications): 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சோனி 65 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் டிவி கொண்டுள்ளது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 4கே ப்ராசஸர் எக்ஸ்1 (4K Processor X1) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், லைவ் கலர் (Live Color), 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (4K X-Reality PRO), மோஷன்ப்ளோவ் எக்ஸ்ஆர் 100 (MotionFlow XR 100) மற்றும் எச்டிஆர்10 (HDR10) கொண்ட மாடலாக இந்த சோனி 65 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் டிவி இருக்கிறது. எச்எல்ஜி (HLG) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), வாட்ச்லிஸ்ட் (Watchlist) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) உள்ளது.
இதுபோக கூகுள் காஸ்ட் (Google Cast), கேம் மெனு (Game Menu) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஎல்எல்எம் (ALLM) கிடைக்கிறது. ஆப்பிள் பிரியர்களுக்காக ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple Airplay 2), ஆப்பிள் ஹோம் கிட் (Apple Homekit) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அலெக்சா (Alexa) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சோனி 65 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆடியோவிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. 20W அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் மட்டுமே கிடைத்தாலும், அது ஓப்பன் பப்பிள் ஸ்பீக்கராக (Open Baffle Speaker) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் (DTS Digital Surround), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) உள்ளது.


Click it and Unblock the Notifications