ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.9000 ஆஃபரில் 55 இன்ச் பிராவியா டிவி.. கூகுள் TV ஓஎஸ்.. 4K அல்ட்ரா எச்டி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடந்துவரும் மெகா பெஸ்டிவல் டீலில் (Amazon Mega Festival Deal) சோனி 55 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி (Sony 55 inches BRAVIA 2M2 Series 4K TV) மாடல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், 4கே அல்ட்ரா எச்டி, டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பீச்சர்களை கொண்ட இந்த சோனி டிவியின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த சோனி 55 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவிக்கு 37 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.62,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்தால், ரூ.6,250 தள்ளுபடி கிடைக்கும். மேலும், எந்த கார்டுகளும் இல்லாமலேயே ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கும். 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும்போது, அதே எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.7,500 தள்ளுபடி கொடுக்கப்படும். அதேபோல ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கும். மொத்தமாக ரூ.9,000 கம்மியான விலைக்கு இந்த சோனி 55 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி மாடலை வாங்கி கொள்ளலாம். பீச்சர்களும் அல்ட்ரா பிரீமியமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
சோனி 55 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (Sony 55 inches BRAVIA 2M2 Series 4K TV Specifications): பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் கொடுக்கும்படி 55 இன்ச் 4கே எல்இடி (4K LED) டிஸ்பிளே மட்டுமல்லாமல், வீடியோ என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க 4கே ப்ராசஸர் எக்ஸ்1 (4K Processor X1) கொடுக்கப்பட்டு இருக்கிறது. லைவ் கலர் (Live Color) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (4K X-Reality PRO), மோஷன்ப்ளோவ் எக்ஸ்ஆர் 100 (MotionFlow XR 100) கிடைத்து இருக்கிறது. எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சோனி 55 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சோனி 55 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி மாடலானது, 20W ஆடியோ அவுட்புட் கொடுக்கிறது. இதில் டிடிஎஸ் டிஜிட்டல் சரவுண்ட் (DTS Digital Surround) கிடைக்கிறது. மேலும், டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. டால்பி ஆடியோவையும் (Dolby Audio) கொடுத்து இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது.
மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கேம் மெனு (Game Menu) கிடைக்கிறது. ஆப்பிள் பிரியர்களுக்காக ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple Airplay 2), ஆப்பிள் ஹோம் கிட் (Apple Homekit) கிடைக்கிறது. அலெக்சா அசிஸ்டன்ட் கொண்ட மாடலாகவும் இந்த சோனி 55 இன்ச் பிராவியா 2எம்2 சீரிஸ் 4கே டிவி கிடைக்கிறது. 4 எச்டிஎம்ஐ, 2 யூஎஸ்பி உள்ளது. ப்ளூடூத், வை-பை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
