சோனி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் டிவி.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

|

சோனி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய 32-இன்ச் ஸமார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான வெளிவந்துள்ளது இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த புதிய சோனி ஸ்மார்ட் டிவி மாடல் 30 டபிள்யூ 830 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்று தான் கூறவேண்டும.

30 டபிள்யூ 830 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி

30 டபிள்யூ 830 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி

30 டபிள்யூ 830 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.31,900-ஆக உள்ளது. ஆனால் இதே விலையில் மி, VU உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 43-இன்ச், 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை எளிமையாக வாங்க முடியும். ஆனாலும் தனித்துமான அம்சங்களுடன் இந்த 32-இன்ச் சோனி டிவி வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

 அறிமுகம் சோனி டிவி மாடல்

மேலும் இப்போது இந்தியாவில் அறிமுகம் சோனி டிவி மாடல் சோனியின் விநியோக சேனல்கள், முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சோனி சென்டர் பிரத்தியேக கடைகள் வழியாக விற்பனைக்கு வருகிறது.

ஒரு கூடை ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஆப்பிள் ஐபோன்.. நிறுவனம் தெரிந்தே செய்த வேலை..ஏன் தெரியுமா?ஒரு கூடை ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஆப்பிள் ஐபோன்.. நிறுவனம் தெரிந்தே செய்த வேலை..ஏன் தெரியுமா?

Google Chromecast ஆதரவு

Google Chromecast ஆதரவு

சோனி 32W830 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 366x768 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் உள்ளமைக்கப்பட்ட Google Chromecast ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ.549 விலையில் புது pTron பவர் பேங்க்.. ரூ.899 விலையில் pTron TWS இயர்பட்ஸ் வாங்கலாம்.. எங்கே தெரியுமா?ரூ.549 விலையில் புது pTron பவர் பேங்க்.. ரூ.899 விலையில் pTron TWS இயர்பட்ஸ் வாங்கலாம்.. எங்கே தெரியுமா?

எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட

இந்த புதிய சோனி டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டெண்டிற்கான ஆதரவு மற்றும் எச்டிஆர் 10 மற்றும் எச்எல்ஜி வடிவங்களுக்கான எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது.

என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?என் பொண்டாட்டிக்கு 'இது' தெரிஞ்சா சோழி முடிஞ்சிரும்.. ப்ளீஸ் சொல்லாதீங்க என்று கெஞ்சிய கணவர்.. ஏன் தெரியுமா?

 டிவி ஆனது ஃபுல் எச்டி

மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி 60 ஹெர்ட்ஸ் சிக்னல் வரை துணைபுரிகிறது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பிலிருந்து 20W மதிப்பிடப்பட்ட ஆடியோ வெளியீட்டைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

போன்னே அப்டி இருக்கும்., இந்த வாட்ச் கேட்கவா வேணும்- ஒன்பிளஸ் வாட்ச் விற்பனை தேதி அறிவிப்பு!போன்னே அப்டி இருக்கும்., இந்த வாட்ச் கேட்கவா வேணும்- ஒன்பிளஸ் வாட்ச் விற்பனை தேதி அறிவிப்பு!

எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு

குறிப்பாக மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ப்ளூடூத் 4.2, 3.5 மிமீ ஆடியோ அவுட்புட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். சோனியின் எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ picture processing தொழில்நுட்ப வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. மேலும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது 30 டபிள்யூ 830 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி .

Best Mobiles in India

English summary
Sony 32W830 Android Smart TV Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X