இந்தியா: சரியான நேரத்தில் களமிறங்கிய அதிநவீன ஸ்மார்ட் ஹெல்மெட்.!

|

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில்
மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம்இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில்மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 கொரோனாவைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து

மும்பையிலும் கொரோனாவைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது, குறிப்பாக இந்தியாவில் அதிக கொரோனாவைரஸ் பாதிப்பு கொண்ட பகுதிகளில் ஒன்றாக மும்பை இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்டறியஅதநவீன ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமேசான் அதிரடி- எது வாங்கினாலும் தள்ளுபடி: ஆகஸ்ட் 6 வரை காத்திருங்கள்!அமேசான் அதிரடி- எது வாங்கினாலும் தள்ளுபடி: ஆகஸ்ட் 6 வரை காத்திருங்கள்!

இதை கொண்டு ஒரே

அதாவது இந்த ஸ்மார்ட் ஹெல்மட்களில் போர்டபிள் தெர்மோஸ்கேனர் பொறுத்தப்பட்டுள்ளன, இது உடல் வெப்பத்தை கண்டறியும் சாதனம்ஆகும். முன்னதாக இதேபோன்ற ஸ்மார்ட் ஹெல்மெட்கள் துபாய்,இத்தாலி மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டன. இதை கொண்டு ஒரே
நிமிடத்தில் பலருக்கு உடல் வெப்ப சோதனை செய்ய முடியும்.

ஸ்கிரினீங் வழிமுறைகளை

மேலும் வழக்கமான ஸ்கிரினீங் வழிமுறைகளை பயன்படுத்தினால் அதிகநேரம் ஆகும்.உதரணமாக 20ஆயிரம் பேர் அடங்கிய பகுதியில்300பேருக்கு சோதனை செய்ய மூன்று மணி நேரம் ஆகும் என தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவ உதவியாளரான நீலு ஜெயின்என்பவர் தெரிவித்தார்.

SpaceX ராக்கெட் நோஸ்கோன்களை கேட்ச் பிடித்த கப்பல்கள்! நடுக்கடலில் எடுக்கப்பட்ட வீடியோ!SpaceX ராக்கெட் நோஸ்கோன்களை கேட்ச் பிடித்த கப்பல்கள்! நடுக்கடலில் எடுக்கப்பட்ட வீடியோ!

ஹெல்மட்களை பயன்படுத்தும் போது இரண்டறை மணி

ஆனால் இந்த ஸ்மார்ட் ஹெல்மட்களை பயன்படுத்தும் போது இரண்டறை மணி நேரத்தில் 6 ஆயிரம் பேருக்கு சோதனை செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மட்கள் மும்பை மற்றும் பூனே நகரங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரு நகரங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதிவேகமாக செய்துவிடும்

குறிப்பாக சோதனையை அதிவேகமாக செய்துவிடும் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் விலை ரூ.6-லட்சம் ஆகும். மேலும் இவைவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Smart Helmets Introduced in Mumbai for avoid Coronavirus: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X