ரூ.2500க்கு இப்படி ஒரு Earbuds-க்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. மார்க்கெட்டை சிதறவிடும் புது Skullcandy பட்ஸ்!
ஸ்கல்கேண்டி நிறுவனமானது "நான் நிறுத்த மாட்டேன்" என்கிற படியாக, இந்திய சந்தையில் மேலுமொரு புதிய டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் குவாட் மைக் யூனிட் உடனாக இஎன்சி (ENC) ஆதரவை வழங்கும் ஸ்கல்கேண்டி அப்ரோர் என்கிற ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கல்கேண்டியின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆனது சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 46 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் டச் கண்ட்ரோல்களை ஆதரிக்கின்றன மற்றும் குறிப்பிடப்படாத ஐபி ரேட்டிங்கை கொண்டுள்ளன. வேறு என்னென்ன அம்சங்கள்? என்ன விலை? இதோ விவரங்கள்:

இந்தியாவில் ஸ்கல்கேண்டி அப்ரோர் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் விலை: இது ஒரு சிறப்பு வெளியீட்டு விலையின் கீழ், அதாவது வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கும் (ஸ்கல்கேண்டி வலைதளத்தின் படி அசல் விலை ரூ.8999 ஆகும்). ஆர்வமுள்ளவர்கள் இதை அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக மேட் பிளாக் என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனில் வாங்கலாம்.
ஸ்கல்கேண்டி அப்ரோர் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்:
- இன்-இயர் டிசைன்
- தெளிவான அழைப்புகளுக்கு குவாட் மைக்-பேக்டு இஎன்சி
- ஒவ்வொரு இயர்பட்டிலும் இரண்டு மைக்ரோஃபோன்ஸ்
- 10மிமீ டிரைவர்
- ப்ளூடூத் 5.4
- டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி
- லோ லேடன்சி
- வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு (சரியான ஐபி ரேட்டிங் வெளிப்படுத்தவில்லை)
- கேஸுடன் சேர்ந்து மொத்த பேட்டரி லைஃப் 46 மணிநேரம்
- 10 நிமிட குவிக் சார்ஜிங் மூலம் இரண்டு மணிநேரம் வரை தொடர்ச்சியான பிளேடைம்
- சார்ஜிங் கேஸ் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது.
முன்னதாக (கடந்த செப்.8 ஆம் தேதி) ஸ்கல்கேண்டி நிறுவனம் இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (Ink'd ANC True wireless earbuds) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது இது ஏஎன்சி (ANC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation), மல்டிபாயிண்ட் பேரிங் (Multipoint pairing) மற்றும் பல குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.
ஸ்கல்கேண்டி இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் அசல் அறிமுகம் விலை ரூ.12,999 ஆகும். இருப்பினும், ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்த இயர்பட்ஸ் மீது ரூ.10,000 என்கிற மிகப்பெரிய வெளியீட்டு தள்ளுபடியை (Launch discount) அறிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதை வெறும் ரூ.2,999 என்கிற அறிமுக விலையில் (Introductory price tag) வாங்கலாம்.
ஸ்கல்கேண்டி இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது சிங்கிள் பிளாக் க்ளாஸி கலர் ஆப்ஷனில் (Black Glossy Colour Option) மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்கல்கேண்டி பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Skullcandy Official Website) மற்றும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஸ்கல்கேண்டி பிராண்டின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்களில் 10மிமீ ஆடியோ டிரைவர்கள் (10mm Drivers) உள்ளன மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படுகின்றன. இது மல்டிபாயிண்ட் பேரிங்கை ஆதரிக்கிறது, இதன் மூலம் பல டிவைஸ்களுடன் (Multiple Devices) தடையின்றி கனெக்ட் செய்யலாம்.
இந்த இயர்பட்ஸ் மாடலில் உள்ள இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஏஎன்சி ஆகும், இது 4 மைக்ரோஃபோன் அமைப்பால் (4 microphone setup) இயக்கப்படுகிறது, இதில் இரண்டு மைக்குகள் தெளிவான கால்களை (clear voice calls) உறுதி செய்கிறனன. பேட்டரியை பொறுத்தவரை ஸ்கல்கேண்டி இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், சார்ஜிங் கேஸுடன் (Charging Case) சேர்த்து 43 மணிநேர பேட்டரி லைஃப்பை (43 Hours Battery Life) வழங்கும்.


Click it and Unblock the Notifications








