விற்பனைக்கு வந்த கெத்தான Skullcandy Mod TWS இயர்பட்ஸ்: விலை என்ன தெரியுமா?

|

Skullcandy Mod TWS இயர்பட்ஸ்: ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இப்போது ஒரு ஹெட்செட் அல்லது இயர்பட்ஸ்கள் கட்டாயம் தேவைப்படுகிறது. முன்பெல்லாம், ஒரு புதிய ஸ்மார்ட்போன் டிவைஸை காசு கொடுத்து வாங்குகிறோம் என்றால், அதனுடனே ஒரு சார்ஜ்ர் ஹெட் மற்றும் ஹெட்போன்களை நிறுவனங்கள் வழங்கிவந்தன. ஆனால், இப்போது நிலைமையே தலைக்கீழாக மாறிவிட்டது. எந்த போன்களுடனும் இப்போது இயர்போன்கள் வருவதில்லை.

வயர்லெஸ் அனுபவத்தை அனுபவிக்க வைத்த நிறுவனங்கள்

வயர்லெஸ் அனுபவத்தை அனுபவிக்க வைத்த நிறுவனங்கள்

இன்றைய சூழ்நிலையில் சில ஸ்மார்ட்போன் மாடல்களுடன் அதன் பாக்சில் சார்ஜ்ர்கள் கூட வருவதில்லை. இது ஒரு புறம் பயனர்களுக்கு விரக்தியை அதிகரிக்கிறது என்றாலும் கூட, இதன் மூலம் இப்போது பயனர்களுக்கு புதிய அனுபவத்தை அனுபவிக்கக் கூடிய பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்பதையும் நம்மால் மறுக்க முடியவில்லை. வெறும் வயர்டு ஹெட்போன்களை பயன்படுத்தி வந்த நம்மை, இப்போது நிறுவனங்கள் வயர்லெஸ் அனுபவத்தை அனுபவிக்க வைத்துவிட்டன.

தரமான கேட்ஜெட்களை வாங்க முன் வரும் வாடிக்கையாளர்கள்

தரமான கேட்ஜெட்களை வாங்க முன் வரும் வாடிக்கையாளர்கள்

இதை நாம் ஒரு வகையில் ராஜதந்திரம் என்றே கூறலாம். ஆம், இலவசமாக வழங்கப்பட இயர்போன்ஸ்கள் நிறுத்தப்பட்டதும் வாடிக்கையாளர்கள் தானாக அவர்களுக்கு விருப்பமான விலையில், தரமான கேட்ஜெட்களை வாங்க முன்வந்துவிட்டனர். இது இப்போது ஆடியோ சாதனங்களுக்கான புதிய சந்தையையே உலகளவில் உருவாகிவிட்டது என்பது தான் ஆச்சரியம். சரி, இப்போது விஷயத்திற்கு வரலாம்.

Skullcandy Mod TWS இயர்பட்ஸ்

Skullcandy Mod TWS இயர்பட்ஸ்

இப்போது நாம் வயர்லெஸ் காலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும். பெரும்பாலான மக்கள் தரமான வயர்லெஸ் ஆடியோ அனுபவத்தை அனுபவிக்கத் தான் விரும்புகிறார்கள். அந்த வரிசையில், இப்போது தரமான அம்சத்துடன் TWS செயல்பாட்டுடன் இயங்கும் புதிய இயர்பட்ஸ் சாதனத்தை முன்னணி நிறுவனமான Skullcandy நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன் புதிய சாதனம் Skullcandy Mod TWS என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அட்டகாசமான ஆடியோ தரம் சுப்ரீம் குவாலிட்டி

அட்டகாசமான ஆடியோ தரம் சுப்ரீம் குவாலிட்டி

இந்த புதிய Skullcandy Mod இயர்பட்ஸ் சாதனம் மல்டி பாயிண்ட் பேரிங் அம்சத்துடன் வருகிறது. இது மல்டிபிள் டிவைஸுடன் உடனுக்குடன் மாற்றி பேர் செய்துகொள்ள அனுமதிக்கிறது. இது Skullcandy ஆப்ஸ் உடன் இணக்கமாகச் செயல்படக்கூடியது. அட்டகாசமான ஆடியோ தரத்தை, சூப்பர் பாஸ் உடன் அனுபவிக்க விரும்பும் பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால், கட்டாயம் இந்த Skullcandy Mod இயர்பட்ஸை நீங்கள் ட்ரை செய்ய வேண்டும்.

கிளியர் வாய்ஸ் ஸ்மார்ட் மைக் டெக்னாலஜி

கிளியர் வாய்ஸ் ஸ்மார்ட் மைக் டெக்னாலஜி

இந்த ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் தரமான டியூன் ட்ரைவர்களால் இயங்குகிறது. இதன் சவுண்ட் தரம் சுப்ரீம் குவாலிட்டியில் இருப்பதாகவும் ஸ்கல்காண்டி நிறுவனம் கூறியுள்ளது. பாட்காஸ்ட், வீடியோ, மியூசிக் என்று பலவிதமான மோட்களில் சிறந்த ஆடியோ தரத்தை வழங்கும் படி இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் கிளியர் வாய்ஸ் ஸ்மார்ட் மைக் டெக்னாலஜி அம்சம் கூட வழங்கப்பட்டுள்ளது. இது இரைச்சலை கட்டுப்படுத்தி ஆடிவை கிளியராக வழங்குகிறது.

எத்தனை மணி நேர பேட்டரி ஆயுள்?

எத்தனை மணி நேர பேட்டரி ஆயுள்?

இந்த சாதனம் IP55 டஸ்ட், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தை நீங்கள் மறந்து எங்காவது விட்டுவிட்டால், Tile ஆப்ஸ் மூலமாக அதன் லொகேஷன் எங்கிருக்கிறது என்பதைக் கூட உங்களால் அறிந்துகொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் 34 மணி நேர பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது என்று நிறுவனம் வழங்குகிறது.

Skullcandy Mod True Wireless Earbuds விலை என்ன?

Skullcandy Mod True Wireless Earbuds விலை என்ன?

உங்களுக்குக் கெத்தான ஒரு TWS அனுபவத்துடன் கூடிய ஆடியோ அனுபவத்தைப் பெற ஆசையாக இருக்கிறதா? அப்படியானால், இந்த டிவைஸ் உங்களுக்கானது. Skullcandy இன்று இந்தியாவில் அதன் Mod True Wireless Earbuds விற்பனையை அறிவித்துள்ளது. Skullcandy Mod இன் விலை ரூ. 5,999 ஆகும். இப்போது இந்த சாதனம் Skullcandy.in, Amazon மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் மூலம் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Skullcandy Mod truly wireless earbuds launched in India for Rs 5999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X