Home
Gadgets

உட்ராதீங்க எப்போவ்.. ரூ.12,999 மதிப்புள்ள இந்த TWS பட்ஸ் மீது ரூ.10,000 டிஸ்கவுண்ட்!

பிரபல ஆடியோ தயாரிப்பு நிறுவனமான ஸ்கல்கேண்டி (Skullcandy) ஆனது தனது புதிய ஏஎன்சி டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (ANC TWS Earbuds) மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்து, இது எடுத்த உடனேயே ரூ.10,000 தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்றுகூறி பரபரப்பை கிளப்பி உள்ளது.

என்ன மாடல்? ஸ்கல்கேண்டி நிறுவனம் இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (Ink'd ANC True wireless earbuds) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஏஎன்சி (ANC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation), மல்டிபாயிண்ட் பேரிங் (Multipoint pairing) மற்றும் பல குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.12,999 மதிப்புள்ள இந்த TWS பட்ஸ் மீது ரூ.10,000 டிஸ்கவுண்ட்!

ஸ்கல்கேண்டி பிராண்டின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்களில் 10மிமீ ஆடியோ டிரைவர்கள் (10mm Drivers) உள்ளன மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) வழியாக உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படுகின்றன. இது மல்டிபாயிண்ட் பேரிங்கை ஆதரிக்கிறது, இதன் மூலம் பல டிவைஸ்களுடன் (Multiple Devices) தடையின்றி கனெக்ட் செய்யலாம்.

கேமிங் ஆர்வலர்களுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸை வழங்க இந்த இயர்பட்ஸ் மாடலில் லோ லேடன்சி மோட் (Low latency mode) உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் மாடலில் உள்ள இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஏஎன்சி ஆகும், இது 4 மைக்ரோஃபோன் அமைப்பால் (4 microphone setup) இயக்கப்படுகிறது, இதில் இரண்டு மைக்குகள் தெளிவான கால்களை (clear voice calls) உறுதி செய்கிறனன.

பேட்டரியை பொறுத்தவரை ஸ்கல்கேண்டி இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், சார்ஜிங் கேஸுடன் (Charging Case) சேர்த்து 43 மணிநேர பேட்டரி லைஃப்பை (43 Hours Battery Life) வழங்கும். இது குவிக் சார்ஜிங்கையும் (Quick Charging) ஆதரிக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) வழியாக 10 நிமிட குவிக் சார்ஜிங் மூலம் 2 மணிநேர ஆடியோ பிளேபேக்கை (Audio Playback) பெறலாம்.

கடைசியாக ஸ்கல்கேண்டி நிறுவனம் இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பிற்கான (Water and sweat resistance) ஐபிஎக்ஸ்4 (IPX4) ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. இது ஸ்போர்ட்ஸ் மற்றும் உடல்பயிற்சி ஆர்வலர்களை ஈர்க்கும் ஒரு முக்கியமான அம்சமாக திகழ்கிறது.

என்ன விலை? ஸ்கல்கேண்டி இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் அசல் அறிமுகம் விலை ரூ.12,999 ஆகும். இருப்பினும், ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்த இயர்பட்ஸ் மீது ரூ.10,000 என்கிற மிகப்பெரிய வெளியீட்டு தள்ளுபடியை (Launch discount) அறிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதை வெறும் ரூ.2,999 என்கிற அறிமுக விலையில் (Introductory price tag) வாங்கலாம்.

ஸ்கல்கேண்டி இங்க்'டு ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது சிங்கிள் பிளாக் க்ளாஸி கலர் ஆப்ஷனில் (Black Glossy Colour Option) மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்கல்கேண்டி பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Skullcandy Official Website) மற்றும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Skullcandy Inkd ANC TWS Earbuds Launched in India For Rs 12999 And Gets Rs 10000 Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X