காதலர் தினத்தில் பரிசளிக்க பொருத்தமான கேட்ஜெட்டுக்கள்.!

காதலர் தினத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை கவர பரிசளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

|

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் என்பது காதலர்கள் மட்டுமின்றி அன்பை பரிமாறி கொள்ளும் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் அன்புக்குரியவர்களை கவர பரிசளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

காதலர் தினத்தில் பரிசளிக்க பொருத்தமான கேட்ஜெட்டுக்கள்.!

இந்த நிலையில் வழக்கமான காதல் பரிசுகளை கொடுப்பதற்கு பதில் பயனுள்ள நல்ல கேட்ஜெட் பரிசாக காதலர் தினத்தில் கொடுத்தால் அடுத்த காதலர் தினம் வரை அந்த பரிசு நமது அன்புக்குரியவரின் மனதில் ஞாபகமாக இருக்கும். ரூ.6000 விலையில் பரிசளிக்க தகுந்த கேட்ஜெட்டுக்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. ஆல் நியூ எக்கோ டாட்:

1. ஆல் நியூ எக்கோ டாட்:

இது ஒரு எளிமையான வாய்ஸ் கமாண்ட் கேட்ஜெட். இந்த கேட்ஜெட் நிச்சயம் உங்கள் அன்புக்குரியவரை கவரும் வகையில் இருக்கும். வாய்ஸ் கமாண்ட் மூலம் இசையை ரசித்து கேட்க, கேள்விகள் கேட்க, செய்திகள் தெரிந்து கொள்ள, தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்ள, அலாரம் வைக்க, மற்ற வீட்டுக்கு பயனுள்ள பல பணிகளை செய்ய இந்த எக்கோ டாட் உதவுகிறது. அதே நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்கல் அமேசான் பிரைம் மியூசிக், டியூன் இன், சாவான், ஹன்மா உள்பட பல இசை செயலிகளில் இருந்து எண்ணில்லா இசையமை கேட்டு மகிழவும் இந்த பரிசு உதவும். இதில் உள்ள ஸ்பீக்கர் மிகத்தெளிவான அவுட்புட்டை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்த சாதனத்தின் விலை ரூ.4449 மட்டுமே. இந்த ஆல் நியூ எக்கோ டாட் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும்.

2. கிண்டில் இ-ரீடர்:

2. கிண்டில் இ-ரீடர்:

உங்கள் அன்புக்குரியவர் புத்தகம் படிப்பதில் விருப்பம் உள்ளவராக இருந்தால் இந்த கிண்டில் இ-ரீடர் நிச்சயம் அவருக்கு ஒரு சிறப்பான பரிசாக அமையும். மிகவும் குறைந்த எடையில் மெலியதாக இருக்கும் இந்த சாதனம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அதிக சக்தியுள்ள பேட்டரியில் கிடைக்கின்றது. டேப்ளட் மற்றும் ஸ்மார்ட்போன் போலன்றி அதிக காண்ட்ராஸ்ட் உள்ள டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே இதன் சிறப்பு அம்சம் ஆகும். எனவே சூரிய வெளிச்சத்திலும் எழுத்துக்கள் தெளிவாக தெரியும். மேலும் இமெயில், உள்பட எந்தவித நோட்டிபிகேசனும் இன்றி இடையூறு இன்றி புத்தகம் படிக்கலம். இதன் விலை ரூ.5999 ஆகும்

3. ஃபயர் ஸ்டிக் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோலுடன்:

3. ஃபயர் ஸ்டிக் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோலுடன்:

போரடிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணுவதில் இருந்து உங்கள் அன்புக்குரியவர் விடுதலை ஆக வேண்டும் என்றால் அவருக்கு அமேசான் ஃபயர் ஸ்டிக் பரிசாக அளிக்கலாம். ஒரு சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக இந்த ஃபயர்ஸ்டிக் மாற்றிவிடும். இதில் உள்ள பவர் கேபிளை டிவியுடன் இணைத்து வைபையை கனெக்ட் செய்துவிட்டால் ஒருசில நிமிடங்களில் ஸ்மார்ட் டிவியாக மாறிவிடும். இதன் விலை ரூ.3999 மட்டுமே. இதன் மூலம் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், டிவி தொடர்கள், செயலிகள், கேம்ஸ்கள், குழந்தைகளுக்கான பல நிகழ்ச்சிகள் விளையாட்டு , செய்திகள் மற்றும் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், யூடியூப், ஈராஸ் நெள, வூட், ஏர்டெல் மூவீஸ் உள்பட இண்டர்நெட்டில் கொட்டி கிடக்கும் கோடிக்கணக்கான நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இதில் உள்ள வாய்ஸ் ரிமோட் மூலம் நமக்கு தேவையான நிகழ்ச்சிகளை தேர்வு செய்து பார்க்கலாம்.

4. ஃபியூஜி பிலிம் இன்ஸ்டா மினி கேமிரா:

4. ஃபியூஜி பிலிம் இன்ஸ்டா மினி கேமிரா:

இன்றைய மொபைல் உலகில் கேமிரா போன் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கேமிராமேன் தான் என மார்தட்டி சொல்லலாம். அந்த வகையில் இந்த ஃபியூஜி பிலிம் இன்ஸ்டா மினி கேமிரா உங்களை ஒரு புரபொசனல் கேமிராமேனாக மாற்றிவிடும். இதில் உள்ள நவீன டெக்னாலஜி தானாகவே பிரைட்னெஸ் உள்பட படம் தெளிவாக தோன்ற என்னென்ன தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளும் தொழில்நுட்பம் உள்ளது. அருமையான கிளாரிட்டி, ஆட்டோமெட்டிக் எக்ஸ்பிளோஷர் அளவு, போன்ற அம்சங்கள் அமைந்துள்ள இந்த கேமிரா ரூ.3628 என்ற விலையில் கிடைக்கின்றது. வரும் காதலர் தினத்தில் இந்த பரிசு உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசாக இருக்கும்.

5. மிவி சாக்சோ வயர்லெஸ் புளூடூத் இயர்போன்:

5. மிவி சாக்சோ வயர்லெஸ் புளூடூத் இயர்போன்:

இந்த காலத்தில் வயர்லெஸ் ஹெட்போன் என்பது ஆடம்பரமாக கருதப்படாமல் ஒரு தேவைப்படும் பொருளாகவே கருதப்படுகிறது. இசை விரும்பிகள் இந்த வயர்லெஸ் இயர்போனை தங்கள் காதலர், காதலிகளுக்கு பரிசாக கொடுக்கலம். அல்ட்ரா சாப்ட் குஷன் இயர் கப்ஸ் அடங்கியுள்ளதால் காதில் சொருகும்போது இதமாக இருக்கும். மேலுமிந்த இயர்போன் 17 மணி நேரம் சார்ஜ் நிற்கும் தன்மை உடையது என்பதால் நீண்ட நேரம் இசையை ரசித்து கேட்பவர்களுக்கு சரியான ப்ரிசு பொருளாக இருக்கும், இதன் விலை ரூ.2999 மட்டுமே.

6. அக்டர் பேசிக் ஸ்மார்ட் ஹோம் கிட்:

6. அக்டர் பேசிக் ஸ்மார்ட் ஹோம் கிட்:

உங்கள் காதலர் அல்லது காதலி ஒரு டெக் நபராக இருந்தால் இந்த பரிசு அவருக்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும். இந்த சாதனம் உங்கள் ஸ்மார்ட்போனை கண்ட்ரோல் செய்து வீட்டில் உள்ள ஜெய்சர், மோட்டார், குளிர்சாதன கருவி உள்பட இயக்க உதவும். இந்த சாதனத்தில் ஒரு ஸ்மார்ட்போன் ஹப், ஒரு ஸ்மார்ட் பிளக் மற்றும் ஒரு ஹைபவர் ஸ்மார்ட் ப்ளக் உள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் ஐபோன் ஆகியவற்றின் உதவியால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் உங்கள் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துவிடலாம். இதன் விலை ரூ.5823 மட்டுமே. இந்த சாதனத்தை உங்கள் அன்புக்குரியவருக்கு கொடுத்த இவ்வருட காதலர் தினத்தில் அவரை ஆச்சரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Six tech gadgets under Rs 6000 to gift your partner this Valentines Day : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X