போச்சு.. Mobile-களை தொடர்ந்து Tablet-களின் விலைகளும் உயர்ந்தன.. இனி எக்ஸ்ட்ரா ரூ.2000.. எந்த மாடல்களில்?
ஸ்மார்ட்போன்களின் தொடர்ச்சியான விலை உயர்விற்கு (Smartphone Price Hike) மத்தியில், டேப்லெட் (Tablet) மாடல்களின் விலைகளும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனொரு பகுதியாக இந்திய சந்தையில், ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது 3 டேப்லெட்டு மாடல்களின் விலையை ரூ.2000 வரை உயர்த்தியுள்ளது.
என்னென்ன ஷாவ்மீ டேப்லெட் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளன? ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8), ரெட்மி பேட் 2 ப்ரோ (Redmi Pad 2 Pro) மற்றும் ரெட்மி பேட் 2 (Redmi Pad 2) ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொன்றும் ரூ.2,000 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளன.

பழைய விலைகள் VS புதிய விலைகள்: மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான சஞ்சு சவுத்ரி (Sanju Choudhary) வழியாக கிடைத்துள்ள விவரங்களின் அடிப்படையில் தான், மேற்குறிப்பிட்ட 3 ஷாவ்மீ மற்றும் ரெட்மி டேப்லெட் மடல்களின் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது,.
ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8) பழைய விலை மற்றும் புதிய விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.35,999 இல் இருந்து ரூ.37,999 ஆக உயர்ந்துள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.38,999 இல் இருந்து ரூ.40,999 ஆக உயர்ந்துள்ளது.
ரெட்மி பேட் 2 ப்ரோ (Redmi Pad 2 Pro) பழைய விலை மற்றும் புதிய விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.26,999 இல் இருந்து ரூ.27,999 ஆக உயர்ந்துள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 5ஜி வேரியண்ட் - ரூ.29,999 இல் இருந்து ரூ.30,999 ஆக உயர்ந்துள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 5ஜி வேரியண்ட் - ரூ.31,999 இல் இருந்து ரூ.32,999 ஆக உயர்ந்துள்ளது.
ரெட்மி பேட் 2 (Redmi Pad 2) பழைய விலை மற்றும் புதிய விலை:
4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், எல்டிஇ - ரூ.18,999 இல் இருந்து ரூ.19,999 ஆக உயர்ந்துள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.19,999 இல் இருந்து ரூ.20,999 ஆக உயர்ந்துள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், - ரூ.21,999 இல் இருந்து ரூ.22,999 ஆக உயர்ந்துள்ளது.
OPINION: ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வை தொடர்ச்சியாக கவனித்துவரும் என்னை பொறுத்தவரை, டேப்லெட்கள் மீதான இந்த விலை உயர்வு - திடீரென வந்த அல்லது எதிர்பார்த்த ஒரு நடவடிக்கை அல்ல. நுகர்வோர் தொழில்நுட்ப சந்தையில் நிலவும் பொதுவான போக்குக்கு ஏற்பவே இது அமைந்துள்ளது. இங்கே பொதுவான போக்கு என்று நான் குறிப்பிடுவது - மெமரி (memory) சிப்களின் தட்டுப்பாடு காரணமாக பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே ஆகும்.
ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் மாடல்களின் விலைகளும் அதிகரிப்பதன் விளைவாக, வரவிருக்கும் பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனைகள் ஆனது வழக்கத்தை விட குறைவான உற்சாகத்தையே அளிக்கக்கூடும். ஏனென்றால் என்னை பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்கள் மீது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழங்கும் தள்ளுபடிகள் ஆனது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வை முழுமையாக ஈடுசெய்யாமல் போகவே அதிக வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு விலை அதிகரிப்பிற்கு ரெட்மி பேட் 2 மாடல் ஆனது இன்னுமும் பட்ஜெட் விலைப் பிரிவிலேயே தான் உள்ளது. ஆனால் அதன் உயர்ந்த விலை காரணமாக அதன் வேல்யூ-ஃபார்-மணி (value-for-money) சற்று குறைந்துள்ளது. ஆனால் ரெட்மி பேட் 2 ப்ரோ மாடல் ஆனது மிட்ரேன்ஞ் விலைப் பிரிவில் (mid-range) சற்று மேல்நிலைக்கு நகர்கிறது. அதே சமயம் ஷாவ்மீ பேட் 8 மாடல் ஆனது இப்போது பிரீமியம் டேப்லெட் பிரிவுக்கு நெருக்கமாக வந்துள்ளது.
இதனால், வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தக்கவைக்க ஷாவ்மீ நிறுவனம், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவைகள் கூடுதல் சலுகைகள் மற்றும் தொகுப்பு சலுகைகளை (bundles) அதிகம் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆக நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப்பை வாங்க திட்டமிட்டிருந்தால், அதை உடனே செய்ய வேண்டுமே என்று நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில், அனைத்து நிறுவனங்களும் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. மேலும் இந்த விலை உயர்வு எப்போது நிற்கும் என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது.


Click it and Unblock the Notifications