நொறுக்கிவிட்டாப்ல.. கருப்பு வைரம் மாதிரி 3 டிவைஸ்.. Sharge-ன் கார்பன் பிளேட் பவர் பேங்க்ஸ்.. Power bank விலை?
சார்ஜ் (Sharge) நிறுவனம் புதிதாக 2 பவர் பேங்க் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. சார்ஜ் நிறுவனம் இன்று சார்ஜ் கார்பன் சீரிஸ் பவர்பேங்க் (Sharge Carbon Series Power Bank) சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10,000mAh திறன் கொண்ட சார்ஜ் கார்பன்பிளேடு 10,000mAh (SHARGE CarbonBlade 10000mAh Powerbank) என்ற மாடலுடன், கார்பன்மாக் 5K (CarbonMag 5K) மற்றும் கார்பன்மாக் 10K (CarbonMag10K) ஆகிய வயர்லெஸ் பவர்பேங்க் சாதனங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவற்றின் விலை மற்றும் முழுவ விபரம் இதோ.
நமது இந்திய நாட்டில் மொபைல் (Mobile), ஸ்மார்ட்போன் (Smartphone) , ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), ஸ்மார்ட் டிவி (Smart TV) போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் (electronics gadgets) வரிசையில் அதிகமாக விற்பனையாகும் ஒரு சாதனம் என்றால் அது பவர் பேங்க் (power bank) சாதனம் தான். சரியான பவர் சப்பளை (power supply) இல்லையென்றால், எந்தவொரு சாதனமும் இயங்காது தானே.

நொறுக்கிவிட்டாப்ல.. கருப்பு வைரம் மாதிரி 3 Sharge பவர் பேங்க் டிவைஸ்:
இதை உணர்ந்து பிரத்தியேகமாக சார்ஜிங் (charging) செய்ய உதவும் கருவிகளை மட்டும் விற்பனை செய்யும் நிறுவனம் தான் சார்ஜ் (SHARGE) நிறுவனம். இந்த நிறுவனம் இப்போது அணைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் கார்பன் மெட்ரியல் மூலம் உருவாக்கப்பட்ட தோற்றத்தை கொண்ட Sharge CarbonBlade என்ற பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்சார்ஜ் பவர் பேங்க் (Sharge power bank) 10,000mAh பவர் உடன் வருகிறது.
இந்த புதிய சார்ஜ் கார்பன்பிளேடு 10,000mAh (SHARGE CarbonBlade 1000mAh Power bank) டிவைஸ் டூயல் சார்ஜிங் மோட் உடன் பாஸ்ட் சார்ஜிங் (fast charging) அம்சத்தை ஆதரிக்கிறது. இது பாதுகாப்பான சார்ஜிங் அனுபவத்தை வழங்க பல அடுக்கு பாதுகாப்பை கொண்டுள்ளது. குறிப்பாக இதில் லோ-கரெண்ட் மோட் (low current mode) அம்சமும் இருக்கிறது. இது ஐபோன் 15 (iPhone 15) சாதனத்தை 1.7 முறை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
சார்ஜ் கார்பன்பிளேடு 10,000mAh பவர் பேங்க் (SHARGE CarbonBlade 1000mAh Power bank):
அதேபோல், இந்த பவர் பேங்க் சாதனம் சாம்சங் கேலக்ஸி S24 (Samsung Galaxy S24) ஸ்மார்ட்போனை 1.5 முறை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இது USB-A மற்றும் USB-C போர்ட் உடன் வருகிறது. இது 22.5W PD பாஸ்ட் சார்ஜிங் அவுட்புட்டை (fast charging output) ஆதரிக்கிறது. இந்த பவர் பேங்க் சாதனம் ஐபோன் 15 டிவைஸை வெறும் 25 நிமிடங்களில் 71% வேகமாக சார்ஜ் செய்கிறது.
இது QC3.0 மற்றும் PPS அம்சங்களை கொண்டுள்ளது. இது ஷார்ட் சர்கியூட் (safety features like short-circuit protection) ஆகாமல் பார்த்துக்கொள்கிறது. டிவைஸை அதிக சூடாகாமல் தடுக்கும் பாதுகாப்பு (extreme heat protection) அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கோப்ரா பிளேடு பவர் பேங்க் சாதனம் மிகவும் ஸ்லிம்மான மற்றும் லைட் வெயிட் சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 5861 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சார்ஜ் கார்பன்பிளேடு 10,000mAh பவர் பேங்க் விலை:
அறிமுக சலுகையாக, SHARGE CarbonBlade 1000mAh Power bank விலை தற்போது 49 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 4162 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் இந்த சாதனம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது Sharge வலைத்தளத்தில் வெவ்வேறு விதமான சார்ஜிங் டிவைஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








