விர்ச்சுவல் ரியாலிட்டி ஆடியோ வசதியுடன் சென்ஹெய்சர் ஸ்மார்ட் ஹெட்செட் அறிமுகம்.!
புதிய சென்ஹெய்சர் ஸ்மார்ட் ஹெட்செட் விலைப் பொறுத்தவரை ரூ.19,990-ஆக உள்ளது, அதன்பின்பு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஹெட்செட்கள் கிடைக்கும்.
இந்தயாவில் சென்ஹெய்சர் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட AMBEO ஸ்மார்ட் ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த புதிய ஸ்மார்ட் ஹெட்செட்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆடியோ வசதியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹெட்செட்களில் குறிப்பாக பியூர்டிஜிட்டல் தொழில்நுட்ப அம்சம் பயன்படுத்துவதால் ஆப்பிள் சாதனங்களில் ஒன்றினைந்து அருமையான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளது.

சென்ஹெய்சர் ஸ்மார்ட் ஹெட்செட்:
இப்போது வெளிவந்துள்ள இந்த சென்ஹெய்சர் ஸ்மார்ட் ஹெட்செட் பொறுத்தவரை 3டி சவுண்ட் ரெக்கார்டிங் வசதி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆடியோ ஸ்பேஸ் வழங்குவதில் சிறப்பான ஆடியோ அனுபவத்தை பெற முடியும்.

கன்வெர்ஷன்:
AMBEO ஸ்மார்ட் ஹெட்செட்களில் ஏ/டி மற்றும் டி/ஏ கன்வெர்ஷன் மற்றும் ஆப்பிள் 'எம்எப்ஐ" (MFi) சான்றுடன் லைட்னிங் கனெக்டர்கள் இருப்பதால் ஆப்பிள் ஐஒஎஸ் சாதனங்களில் வேலை செய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன்:
இந்த சாதனத்தில் Situational Awareness-என்ற வசதி வழங்கப்பட்ள்ளது, இதன் மூலம் வெளிப்புற சத்தங்களை தவிர்க்க முடியும். அதன்பின்பு இவற்றில் ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் ராக்கர் ஸ்விட்ச் மூலமாகவும் இயக்க முடியும்.

பில்ட்-இன் மைக்ரோபோன்:
மேலும் இவற்றில் பில்ட்-இன் மைக்ரோபோன் பொறுத்தவரை அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றிற்கு உதவியாக இருக்கும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த அசத்தலான சென்ஹெய்சர் ஸ்மார்ட் ஹெட்செட்.

விலை:
புதிய சென்ஹெய்சர் ஸ்மார்ட் ஹெட்செட் விலைப் பொறுத்தவரை ரூ.19,990-ஆக உள்ளது, அதன்பின்பு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன்ஸ்டோர்களில் இந்த ஹெட்செட்கள் கிடைக்கும்.


ஆண்ட்ராய்டு:
விரைவில் புதிய ஹெட்செட்களில் ஆண்ட்ராய்டு பதிப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் சென்ஹெய்சர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications