Home
Gadgets

அதிரவைக்கும் சென்ஹெய்சர் ஹெட்போன்கள் அறிமுகம்.!

சென்ஹெய்சர் நிறுவனம் தற்சமயம் ப்ளூடூத் மற்றும் வயர்லெஸ் வசதி கொண்ட சிஎக்ஸ் 6.00பிடி (CX 6.00BT) ஹெட்செட் மற்றும் எச்டி 820 பிரீமியம் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்ஹெய்சர் ஹெட்போன் மாடல்களை அமெரிக்காவில் நடைபெறும் சிஇஎஸ் 2018 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது சென்ஹெய்சர் நிறுவனம், மேலும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சென்ஹெய்சர் ஹெட்போன் மாடல்கள்.

சென்ஹெய்சர் நிறுவனம் தற்சமயம் ப்ளூடூத் மற்றும் வயர்லெஸ் வசதி கொண்ட சிஎக்ஸ் 6.00பிடி (CX 6.00BT)ஹெட்செட் மற்றும் எச்டி 820 பிரீமியம் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹெட்செட் மாடல்கள்.

சென்ஹெய்சர்  சிஎக்ஸ் 6.00பிடி:

சென்ஹெய்சர் சிஎக்ஸ் 6.00பிடி:

சென்ஹெய்சர் சிஎக்ஸ் 6.00பிடி(CX 6.00BT) இயர்பட்ஸ் குறைந்த எடை கொண்டுள்ளதாக உள்ளது, அதன்பின்பு கழுத்தில் வைத்து எளிமையாக பயன்படுத்த சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது.

ப்ளூடூத் 4.2:

ப்ளூடூத் 4.2:

சென்ஹெய்சர் சிஎக்ஸ் 6.00பிடி (CX 6.00BT) பொதுவாக ப்ளூடூத் 4.2 மற்றும் 14 கிராம் எடை கொண்டுள்ளது, அதன்பின்பு இன்டகிரேடெட் மைக்ரோபோன், மூன்று பட்டன் கொண்ட ரிமோட், அழைப்புகள், மியூசிக் உள்ளிட்டவற்றை விரல் நுனியில் இயக்க முடியும்.

பேட்டரி பேக்கப்

பேட்டரி பேக்கப்

சென்ஹெய்சர் சிஎக்ஸ் 6.00பிடி பொறுத்தவரை 6மணி நேரம் பேட்டரி பேக்கப் கொண்டவையாக உள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் நான்கு வித அளவுகளில் இயர் அடாப்டர்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

 சென்ஹெய்சர்  எச்டி 820:

சென்ஹெய்சர் எச்டி 820:

சென்ஹெய்சர் எச்டி 820 பொறுத்தவரை மென்மையான மைக்ரோஃபைபர் இயர்பேட் சவுகரியத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு நவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த சென்ஹெய்சர் எச்டி 820 மாடல் வெளிவந்துள்ளது.

சில்வர் கிளேட்:

சில்வர் கிளேட்:

சென்ஹெய்சர் எச்டி 820 ஹெட்செட் பொறுத்தவரை சில்வர் கிளேட் செய்யப்பட்ட OFC கேபிள்கள் கொண்டுள்ளது, மேலும் இவற்றின் விறப்பனை குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

சென்ஹெய்சர் சிஎக்ஸ் 6.00பிடி (CX 6.00BT) விலைப் பொறுத்தவரை 99 டால்கள், இந்திய விலை மதிப்பில் ரூ.6,280-ஆக உள்ளது.சென்ஹெய்சர் எச்டி 820 இந்திய விலை மதிப்பில் ரூ.1,52,420-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Sennheiser CX 6 00BT HD 820 Headphones Launched at CES 2018 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X