Home
Gadgets

இது 1 போதும்.. 8 டிவைஸ் கனெக்டிவிட்டி.. 28 மணி நேர பேக்கப்.. IPX4 ரேட்டிங்.. ஓப்பன்-இயர் டிசைன்.. எந்த மாடல்?

ஓப்பன் இயர் டிசைன் மட்டுமல்லாமல், 8 டிவைஸ்கள் கனெக்டிவிட்டி, ஃபாஸ்ட் சார்ஜிங், 28 மணி நேர பேக்கப், IPX4 ரேட்டிங் மற்றும் டச் கன்ட்ரோல்களுடன் சென்ஹெய்சர் அசென்டம் ஓப்பன் இயர்பட்ஸ் (Sennheiser ACCENTUM Open Earbuds) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. பாக்கெட் சைஸ் சார்ஜிங் கேஸ் மற்றும் லைட் வெயிட் டிசைன் கொண்ட இந்த சென்ஹெய்சர் அசென்டம் ஓப்பன் இயர்பட்ஸ் மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இன்-இயர் பட்ஸ் மாடல்களுக்கு இருப்பதை போலவே ஓப்பன்-இயர் பட்ஸ் மாடல்களுக்கும் தனி வரவேற்பு இருக்கிறது. இது காதுகளை முழுவதும் அடைக்காமலும், அதிக பிரசர் கொடுக்காமலும், அதே நேரத்தில் பக்காவான ஆடியோ அவுட்புட்டையும் கொடுக்கிறது. அதிலும் லைட் வெயிட் கிடைத்தால், சொல்லவே வேண்டியதில்லை. பயன்படுத்தவும் கம்போர்ட்டாக இருக்கும்.

இது 1 போதும்.. 8 டிவைஸ் கனெக்டிவிட்டி.. 28 மணி நேர பேக்கப்.. மாடல்?

இதுபோன்ற டிசைன் மற்றும் பீச்சர்களை இந்த சென்ஹெய்சர் அசென்டம் ஓப்பன் இயர்பட்ஸ் கொடுக்கிறது. 4.4 கிராம் எடை மட்டுமே இயர்பட்கள் வருகின்றன. சார்ஜிங் கேஸ் 29.3 கிராம் எடை வருகிறது. ஆகவே, மொத்தமாகவே 30 கிராம் எடையை மட்டுமே இந்த இயர்பட்ஸ் கொண்டுள்ளது. ஆகவே, காதுகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும்.

அதே நேரத்தில் காம்பாக்ட் சைஸ் கிடைப்பதால், எளிதாக எடுத்து செல்லவும் முடியும். இந்த டிசைனுடன் IPX4 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாக டிசைனில் பிரீமியம் மற்றும் காம்பாக்ட் காட்டி இருக்கிறது. மற்ற பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

சென்ஹெய்சர் அசென்டம் ஓப்பன் இயர்பட்ஸ் அம்சங்கள் (Sennheiser ACCENTUM Open Earbuds Specifications): இந்த மாடலில் 11 எம்எம் டைனாமிக் டிரான்ஸ்டியூசர் கிடைக்கிறது. இதில் சென்ஹெய்சர் டியூன்டு சவுண்ட் (Sennheiser Tuned Sound) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ரிச் மற்றும் டீடெயில்டு ஆடியோ அவுட் எதிர்பார்க்கலாம். சிங்கிள் இயர் லிசனிங் சப்போர்ட் கொடுக்கிறது.

இதன் பட்களில் ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்கள் (Smart Touch Controls) கிடைக்கின்றன. இதில் பிளே, பாஸ், வால்யூம் கன்ட்ரோல்கள் மட்டுமல்லாமல், டக் கெஸ்ச்சர் சப்போர்ட் கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் டைப்-சி (USB-C) சப்போர்ட் வருகிறது. இந்த அசென்டம் ஓப்பன் மாடலின் பட்களில் 36mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 400mAh பேட்டரி கேபாசிட்டி கிடைக்கிறது.

ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 28 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். குயிக் சார்ஜிங் சப்போர்ட் கிடைப்பதால், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 1 மணி நேரத்துக்கு பிளேபேக் கொடுக்கும். ஃபுல் சார்ஜ் செய்ய 1 மணி நேரம் தேவைப்படும். ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டியுடன் எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடக் சப்போர்ட் வருகிறது.

மைக்ரோபோன்களை பார்க்கையில், ஒவ்வொரு பட்களிலும் பீம்ஃபார்மிங் நாய்ஸ் ரெடக்சன் சப்போர்ட் கொண்ட டூயல் எம்ஈஎம்எஸ் (Dual MEMS) டெக்னாலஜி கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் மாடல்களில்கூட டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி மட்டுமே வருகின்றன. ஆனால், இதில் 8 டிவைஸ்களில் கனெக்ட் செய்யும்படி மல்டிபாய்ன்ட் கனெக்டிவிட்டி (Multipoint Connectivity) கிடைக்கிறது.

109dB சவுண்ட் பிரசர் லெவல் கிடைக்கிறது. இந்த சென்ஹெய்சர் அசென்டம் ஓப்பன் இயர்பட்ஸ் மாடலில் பிரீமியம் பீச்சர்கள் கிடைப்பதால், இதன் விலை ரூ. 9,990ஆக இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஓப்பன் இயர் டிசைனில் பிரீமியம் ஆடியோ அனுபவம் வேண்டுமானால், இதை தேர்ந்தெடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sennheiser ACCENTUM Open Earbuds With Smart Touch Controls 8 Devices Connectivity Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X