ஸ்மார்ட்போன் இல்லாமல் செல்பீ எடுக்கலாம்..!!

Written By:

செல்பீ புகைப்படங்களின் வரலாறு 1839 ஆம் ஆண்டு துவங்கினாலும் சில ஆண்டுகளாகவே இவை மிகவும் வைரலாக பேசப்படுகின்றன. செல்பீ என்ற ஓர் வார்த்தை பிரபலமாக பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் முக்கிய காரணம் என்று கூறலாம். முன்பக்க கேமரா கொண்ட எண்ணற்ற ஸ்மார்ட்போன்களே இதற்கு சாட்சி.

ஸ்மார்ட்போன் மூலம் செல்பீ எடுப்பது நினைவுகளை பதிவு செய்வது என்றாலும், உலகளவில் செல்பீ எடுக்க முயன்று உயிரிழப்போர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் ஸ்மார்ட்போன் இல்லாமலும் செல்பீ எடுக்க முடியும் என்கின்றது டிஜெஐ.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிரோன்

டிரோன்

சீனாவை சேர்ந்த டிரோன் தயாரிப்பு நிறுவனம் தான் டிஜெஐ (DJI). இந்நிறுவனம் சமீபத்தில் ஒர் கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது.

கேமரா

கேமரா

தி ஆஸ்மோ எனும் கருவியானது பில்ட் இன் கேமரா கொண்ட செல்பீ ஸ்டிக் ஆகும்.

தரம்

தரம்

தி ஆஸ்மோ செல்பீ ஸ்டிக் கருவியானது 4கே தொழில்நுட்பத்தில் வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

360°

360°

ஆட்டோமேடிக் பானரோமா மோடு கொண்டிருக்கும் இந்த கருவியை கொண்டு 360° கோணத்தில் படமாக்குவது மிகவும் எளிதாக நிறைவடைகின்றது.

டைம் லாப்ஸ்

டைம் லாப்ஸ்

ட்ரைபாட் எனப்படும் கேமரா ஸ்டான்டு இல்லாமல் துல்லியமான வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

எக்ஸ்போஷர்

எக்ஸ்போஷர்

இரவு நேரங்களில் புகைப்படங்களை மிகவும் துல்லியமாக எடுக்கவும் ஆஸ்மோ சிறந்ததாக இருக்கின்றது.

ஸ்டெபிலைசேஷன்

ஸ்டெபிலைசேஷன்

தி ஆஸ்மோ கேமரா மூலம் வீடியோ எடுக்கும் போது நடுக்கங்கள் இல்லாத வீடியோக்களை பதிவு செய்ய முடியும். முதல் முறையாக கையில் எடுக்கும் போதும் எவ்வித அசைவுகளும் திரையில் ஏற்படாது என்கின்றது இதனை தயாரித்த டிஜெஐ நிறுவனம்.

கச்சிதம்

கச்சிதம்

ஆஸ்மோ கேமராவின் கைப்பிடி கைகளில் கச்சிதமாக பொருந்தும் என்பதோடு இதனை கட்டை விரல் மூலமாகவே இயக்கும் படி அத்தனை பட்டன்களும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

ஆஸ்மோ கேமராவினை ஸ்மார்ட்போன் செயலியை கொண்டும் இயக்க முடியும். இதற்கு கேமராவினை ட்ரைபாடில் வைக்க வேண்டும்.

சூழ்நிலை

சூழ்நிலை

ஆஸ்மோ கேமரா எவ்வித மவுன்ட் மற்றும் எக்ஸ்டென்ஷன்களிலும் பொருந்துவதால் அவசர காலங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கின்றது.

ஸ்டேபிலிட்டி

ஸ்டேபிலிட்டி

பைக் மவுன்ட் வழங்கப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போதும் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

ஸ்லீப் மோடு

ஸ்லீப் மோடு

தரையில் சில நிமிடங்கள் வைத்தால் தாணாக ஸ்லீப் மோடு ஆன் ஆகிவிடும். இதனால் இதன் பேட்டரி சேமிக்கப்படுவதோடு நீண்ட நேரம் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோபோன்

மைக்ரோபோன்

கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோபோன் சிறப்பான சத்தத்தை துல்லியமாக பதிவு செய்ய வழி செய்கின்றது. மேலம் 3.5 எம்எம் போர்ட் வழங்கப்பட்டிருப்பதால் தனியாகவும் மைக்ரோபோன் பொருத்த முடியும்.

தளம்

தளம்

இந்த கருவியை உடனடியாக வாங்க விரும்புபவர்கள் டிஜெஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்க முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Selfie Stick Comes With the Camera Built In. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot