இ-ஸ்கேட்டிங் போர்டு: செக்வேஸ்-ன் அசத்தல் ஐடியா!

இந்த செக்வே டிரிப்ட் டிபிள்யூ1 ன் தோற்றம் அனைவரும் எதிர்பார்த்தபடியே வியப்படையச் செய்கிறது.

|

செக்வே நிறுவனத்தின் புதிய தயாரிப்பைப் பற்றிய சமீபத்திய அறிவிப்பு நிச்சயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய அசத்தலான ஒன்று. சமன்படுத்தல் தொழில்நுட்பத்திற்கு (Balancing technology) பெயர்பெற்ற இந்த நிறுவனம் செக்வே டிரிப்ட் டிபிள்யூ1 என்ற இ-ஸ்கேட்ஸ் (e-skates) ஜோடியை அறிவித்துள்ளது. உங்களை திருப்திபடுத்தக்கூடிய அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் என உறுதியளித்துள்ள இந்நிறுவனம், அது தவிர மற்ற விவரங்களை வெளியிடவில்லை.

இ-ஸ்கேட்டிங் போர்டு: செக்வேஸ்-ன் அசத்தல் ஐடியா!

இந்த செக்வே டிரிப்ட் டிபிள்யூ1 ன் தோற்றம் அனைவரும் எதிர்பார்த்தபடியே வியப்படையச் செய்கிறது. இதை பற்றி வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள இ-ஸ்கேட்ஸ், அளவில் சிறியதாகவும், எடைக்குறைவானதாகவும், எளிதில் எடுத்து செல்லுவதற்கு ஏற்றவாறும் உள்ளது. இதன் இதர அம்சங்களைப் பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளியாக நிலையில், அது எப்படி செயல்படுகிறது என்பதை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த இ-ஸ்கேட்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் எரிச்சலூட்டும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்னீக்கர்களுக்கு ஆசைப்பட்டு, அதை காலில் மாட்டிக்கொண்டு படுவேகத்தில் சென்று தங்களின் தலையை உடைத்துக்கொள்வதை தவிர்க்க இது உதவும்.

இ-ஸ்கேட்டிங் போர்டு: செக்வேஸ்-ன் அசத்தல் ஐடியா!

முன்னரே குறிப்பிட்டதை போல, தனது சமன்படுத்தல் தொழில்நுட்பத்தை இந்த ஸ்கேட்டிங் போர்டுகளில் புகுத்தியுள்ள செக்வே, பாதுகாப்பை அம்சத்தை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளது. ஆனால் இந்த தயாரிப்பிற்கான ஒட்டுமொத்த காரணமும் பாதுகாப்பு மட்டுமே என்பது எவ்வளவு தூரம் எடுபடும் என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த கருவி கட்டுபாடுடற்ற நிலைக்கு செல்லும் போதும்,அப்போது அதிலிருந்து கீழே குதிக்கும் போதும் உதவுவதற்கு எந்த பட்டைகளும்(Straps) இருப்பது போல தெரியவில்லை. அந்த பட்டைகள் இல்லாததால் கீழே குதிப்பதற்கு மிதவும் சுலபமாக இருக்கும் என கூறினால், அப்போது மட்டும் தலையில் காயம் ஏற்படாதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

இ-ஸ்கேட்டிங் போர்டு: செக்வேஸ்-ன் அசத்தல் ஐடியா!

செக்வே டிரிப்ட் டிபில்யூ1 ன் விலை மற்றும் எப்போது கிடைக்கும் போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்ற போதிலும், சந்தையில் இதைத்தவிர வேறு சில இ-ஸ்கேட்ஸ் கருவிகளும் உள்ளன. இன்மோசன் ஹோவர் ஸ்சூஸ் எக்ஸ்1 ன் விலை 499 டாலர்கள் மற்றும் இதை முன்பதிவு செய்தால் ஜூலை மாதம் டெலிவரி செய்யப்படும். அட்டகாசமான தோற்றத்தில் வெளிவரும் ராக்கெட்ஸ்கேட்ஸ் 99 டாலர் என்ற விலையில் கிடைக்கிறது.
Best Mobiles in India

English summary
Segway's new e-skates are probably a terrible idea : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X