நாய்களோடு மனிதர்கள் விரைவில் பேசலாம்: புதிய தொழில்நுட்ப முயற்சியில் விஞ்ஞானிகள்

|

விலங்குகள் நடத்தை நிபுணரான பேராசிரியர் கான் ஸ்லோபோட்சிச்சோஃப்பை பொறுத்த வரை, அவரது ஆராய்ச்சியின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தங்கள் எஜமான்களோடு விலங்குகள், ஒரு 'செல்லப் பிராணி மொழிபெயர்ப்பாளர்' மூலம் பேசுவார்கள் என்று நம்புவதாக கூறுகிறார்.

நாய்களோடு மனிதர்கள் விரைவில் பேசலாம்: புதிய தொழில்நுட்ப முயற்சியில்

சமீபகாலமாக நம் வாழ்க்கையில் தொழில்நுட்பம், மிகப்பெரிய மேம்பாட்டு வளர்ச்சியை பெற்று வந்தாலும், நாம் சார்ந்துள்ள குடும்ப அமைப்புகளுக்கு அதை குறித்த தங்களின் மனநிலையில் இருந்து வெளியே வருவதற்கு தயங்குவது ஏன் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த மனநிலை விரைவில் மாற்றத்தைப் பெறலாம். அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விலங்குகளின் குரல் மாற்றங்கள் மற்றும் முகப் பாவனைகளை ஆங்கிலமாக மொழிமாற்றம் செய்து படிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தும் ஒரு கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து விலங்குகள் நடத்தை நிபுணரான பேராசிரியர் கான் ஸ்லோபோட்சிச்சோஃப் கூறுகையில், மற்ற ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளோடு இணைந்து செயல்படும் தனது ஆராய்ச்சியின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தங்கள் எஜமான்களுடன் விலங்குகள், ஒரு 'செல்லப் பிராணி மொழிபெயர்ப்பாளர்' மூலம் பேசுவார்கள் என்று நம்புவதாக கூறுகிறார்.

வடக்கு அரிசோனா பல்கலையைச் சேர்ந்த டாக்டர் கான் ஸ்லோபோட்சிச்சோஃப், புல்வெளி நாய்களைக் குறித்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு நடத்தி, அவை தொடர்பு கொள்ளும் அதிநவீன முறைகளை கண்டுபிடித்துள்ளார்.

அதைத் தவிர, குரைப்பது, உறுமுவது, ஊளையிடுவது உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்களின் பழக்கவழக்கங்களின் காரணங்களைக் குறித்து ஆய்வு நடத்தி, அவற்றின் தொடர்பு கொள்ளும் திறனைப் புரிந்து கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறார்.

அவர் கூறுகையில், இயந்திரத் தன்மையோடு கூடிய ஆய்வின் மூலம் ஒரு நாய் உறுமுவது அல்லது வால் ஆட்டுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை கம்ப்யூட்டர்களால் கண்டறிந்து, நமக்கு கூற முடியும். அவற்றின் தேவையை சரியாக புரிந்து கொண்டால், எதிர்காலத்தில் விலங்குகளோடு பழகுவதற்கான தகுந்த திறனை மனிதர்கள் பெற்றிருப்பார்கள், என்றார்.

கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் அசத்தலான மோட்டோ இ5.!கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் அசத்தலான மோட்டோ இ5.!

இது குறித்து என்பிசி நியூஸிடம் அவர் கூறுகையில், "நாய்களைப் புரிந்து கொள்ள அதிக இடத்தையும் நேரத்தையும் செலவிட்டு அதன் பின்னால் அலைவதைத் தவிர்த்து, இந்தத் தகவலை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்." என்றார்.

தற்போது வடக்கு அரிசோனா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் கான் ஸ்லோபோட்சிச்சோஃப், கடந்த 2013 ஆம் ஆண்டு விலங்குகளின் தனித்தன்மையுள்ள மொழிப் பண்புகளை குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டு, "சேஸிங் டாக்டர் டுலிட்டில்: லெர்னிங் த லாங்குவேஞ் ஆப் அனிமல்ஸ்" என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவரது ஆய்வைக் குறித்து கூறும் போது, இன்னும் பத்தே ஆண்டுகளில் மனிதனும் விலங்குகளும் திறம்பட தொடர்பு கொள்ள முடியும் என்கிறார்.

மேலும் இவரது ஆய்வின் அடிப்படையில், ஸ்லோபோட்சிச்சோஃப் தனது சகப் பணியாளர்கள் இணைந்து புல்வெளி நாய்கள் அல்லது தரை நாய்கள் என்று அழைக்கப்படும் ஒரு விலங்கின் குரல் தொனியை ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யும் ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளனர். இதை தவிர, ஸூலிங்குவா என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனத்தை அவர்கள் உருவாக்கி, விலங்குகளுடன் மனிதர்கள் ஒரு புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தொடர்பு கொள்ள உதவும் அதிக தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சியாளர், தனது வாழ்நாளின் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு, வடக்கு அமெரிக்காவின் புல்வெளி நாய்களின் நடத்தையை குறித்து ஆய்வு நடத்தி, அந்த விலங்குகளுக்கே உரிய தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் சிக்கலான உத்தரவுகள் அல்லது ஆலோசனைகளைக் கொண்ட கடிமையான மொழி அமைப்பை தன்வசப்படுத்தி உள்ளார்.

இந்தப் புத்திசாலித்தனமான கொறித்து திண்ணும் பிராணிகள், தனக்கு எதிராக வருவதன் அளவு மற்றும் உடலின் மேற்பகுதி நிறம் போன்றவற்றை குறிப்பிட்டு வர்ணிக்கும் வகையிலான அழைப்புகளை, தங்களின் குழுவிற்கு அளித்து எச்சரிக்கை அளிக்கிறது. ஸ்லோபோட்சிச்சோஃப்பைப் பொறுத்த வரை, எதிராளியைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிப்பு அளிக்க, புல்வெளி நாய்கள் உரத்த ஒலியை எழுப்புகின்றன.

தங்கள் இடையே வந்துள்ள எதிராளியின் அளவு மற்றும் வகையைப் பொறுத்து, மேற்கூறிய அழைப்பின் தன்மை வேறுபடுகிறது. தொடர்பு கொள்ளும் வகையில் இந்த புல்வெளி நாய்களால் அழைப்புகளை பல்வேறு முறைகளில் இணைக்க முடியும். மேலும் அருகில் உள்ள மனித உடையின் நிறத்தைக் கூட அவைகளால் சுட்டிக்காட்ட முடியும்.

"புல்வெளி நாய்களைக் கொண்டு இதை நமக்கு செய்ய முடியும் என்றால், சாதாரண நாய்கள் மற்றும் பூனைகளைக் கொண்டு நமக்கு செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்" என்று ஸ்லோபோட்சிச்சோஃப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லோபோட்சிச்சோஃப் மற்றும் அவரது அணியினர் இணைந்து, நாய்களின் ஆயிரக்கணக்கான வீடியோக்களைப் பார்த்து, அவற்றின் பல்வேறு விதமான குரைப்புகளையும் உடல் அசைவுகளையும் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த வீடியோக்களைப் பயன்படுத்தி, அவற்றின் தொடர்பு கொள்ளும் சிமிக்ஞைகளைக் குறித்த ஒரு செயற்கை நுண்ணறிவு வழிமுறையைக் கற்று கொடுக்கப்படும்.

இது குறித்து ஸ்லோபோட்சிச்சோஃப் கூறுகையில், "இது போன்ற தொழில்நுட்பம் மூலம் நாய்களைக் குறித்தும் அவற்றின் பழக்கவழக்கங்களைக் குறித்தும் மனிதர்களுக்கு சிறப்பாக புரிந்து கொள்ள முடியும். நாய்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைக்காமல், அவைகளுக்கு அதிக இடத்தை அளிக்கும் வகையில், மேற்கூறிய தகவல்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்" என்றார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Scientists in the US are working on an instrument that would use artificial intelligence (AI) to learn and translate animal's vocalizations and facial expressions into simple English.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X