வைரல்: பிரதமரை நேரடியாக விமர்சித்து இசையமைப்பாளர் விஷால் தத்லானி டிவீட்.!

ரேடார் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக நெட்டிசன்கள் பிரதமரைக் கலாய்த்து வருகின்றனர்.

|

ரேடார் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக நெட்டிசன்கள் பிரதமரைக் கலாய்த்து வருகின்றனர். தற்பொழுது பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான விஷால் தத்லானி புதிய டிவீட்டை பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் விஷால் தத்லானி டிவீட்

இசையமைப்பாளர் விஷால் தத்லானி டிவீட்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டேக் செய்து இசையமைப்பாளர் விஷால் தத்லானி நேற்று இந்த டிவீட்டை பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக விமர்சித்துப் பதிவிடப்பட்டுள்ள இந்த புதிய டிவீட் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

ரேடார் சர்ச்சையில் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனியார் சேனலுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், "திட்டமிட்ட நாளில் வானிலை மோசமாக இருந்ததால் வேறு நாளில் தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர். ஏராளமான மேகக்கூட்டமும் மழையும் பெய்து வருகிறது. பாகிஸ்தான் ரேடாரில் இருந்து நமது விமானங்கள் தப்பிக்க மேகக்கூட்டங்கள் இருந்தன. அது நமக்கு உதவும் என்று என்னுடைய அறிவுக்கு உணர்த்தியது. ஆதலால் தாமதிக்காமல் புறப்படுங்கள் என்றுகூறித் தாக்குதலைத் துவக்க அனுமதி வழங்கினேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

விஷால் தத்லானி

விஷால் தத்லானி

அறிவியல் உண்மைகளைச் சற்று அறிந்து தெரிந்த பின், கருத்துக்களைப் பதிவிடுங்கள் என்றும், தெரியாத விஷயங்களைத் தகுந்தவர்களிடம் கேட்டு நன்கு அறிந்த பின் பதிவிடுங்கள் என்றும் தற்பொழுது விஷால் தத்லானி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சங்கடமான சூழ்நிலையில் இந்தியா

சங்கடமான சூழ்நிலையில் இந்தியா

ரேடார் பற்றியும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும், நாட்டின் பிரதமருக்கே தெரியவில்லை என்பது உலகின் கண்களில் சங்கடமான சூழ்நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்றும், தேர்தல் முடிவுகள் வரும்வரை நீங்கள் தான் இந்தியாவின் பிரதமர் எனவே பொறுப்பாக இருங்கள் என்றும் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சிலர் இதை சீரியஸாகவும், சிலர் கலாய்த்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
science is real dont embarrass india dadlani on pms cloud remark : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X