சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.! விலை என்ன தெரியுமா?
ஜப்பானைச் சேர்ந்த டிவி தயாரிப்பு நிறுவனமான சேன்யோ நிறுவனம் தனது நெபுலா சீரிஸ் தயாரிப்பின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்டிவி மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

சேன்யோ நெபுலா சீரிஸ் டிவி
சேன்யோ நெபுலா சீரிஸ் 32' இன்ச் எச்.டி ரெடி மற்றும் சேன்யோ நெபுலா சீரிஸ் 43' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி என்ற இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையை சேன்யோ நிறுவனம் அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது.

பட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி
சேன்யோ நெபுலா சீரிஸ் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் வெறும் ரூ.12,999 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேபோல் சேன்யோ நிறுவனத்தின் சேன்யோ நெபுலா சீரிஸ் 43' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் வெறும் ரூ.22,999 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேன்யோ நெபுலா சீரிஸ் 32' டிவி சிறப்பம்சம்
- 32' இன்ச் உடன் கூடிய 60 ஹெர்ட்ஸ் 1366 x 768 எச்.டி ரெடி டிஸ்பிளே
- 800:1 கான்ட்ராஸ்ட் விகிதம்
- 280cd/m2 பிரைட்னெஸ்
- Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட 896MHz CA9 பிராசஸர்
- 4GB eMMC ஸ்டோரேஜ்
- 8 x 2 Watts ஸ்பீக்கர்
- 2 USB போர்ட்
- 2 HDMI போர்ட்
- வைஃபை
- ப்ளூடூத்
- RJ-45
- 3.5 mm ஆடியோ ஜாக்
விலை : ரூ.12,999

சேன்யோ நெபுலா சீரிஸ் 43' டிவி சிறப்பம்சம்
- 43' இன்ச் உடன் கூடிய 60 ஹெர்ட்ஸ் 1920×1080 முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே
- 1000:1 கான்ட்ராஸ்ட் விகிதம்
- 300cd/m2 பிரைட்னெஸ்
- Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட 896MHz CA9 பிராசஸர்
- 4GB eMMC ஸ்டோரேஜ்
- 10 x 2 watts ஸ்பீக்கர்
- 2 USB போர்ட்
- 2 HDMI போர்ட்
- வைஃபை
- ப்ளூடூத்
- RJ-45
- 3.5 mm ஆடியோ ஜாக்
விலை : ரூ.22,999


Click it and Unblock the Notifications