இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. ரூ.18,999 பட்ஜெட்ல 50 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS..
சன்சோய் (Sansui) நிறுவனத்தின் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தற்போது பிளிப்கார்ட் தளத்தில் கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி டால்பி ஆடியோ, குவாட்-கோர் பிராசஸர், 16ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த 50 இன்ச் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் Sansui 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Sansui 50 inch Ultra HD 4K Smart Google TV)மாடலுக்கு 61 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த Sansui 50 இன்ச் டிவியை ரூ.18,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Sansui 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Sansui 50 inch Ultra HD 4K Smart Google TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த Sansui 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் பிரைட்னஸ், 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த மீடியாடெக் குவாட்-கோர் சிஏ53 பிராசஸர் (quad-core CA53 processor) உடன் இந்த 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் (மெமரி) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 50 இன்ச் டிவி.
டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஸ் (DTS) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களுடன் இந்த Sansui 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்தது. பின்பு 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (jioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவும் கொடுக்கிறது இந்த Sansui 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. மேலும் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவியில் உள்ளன. பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
மாலி ஜி52 எம்சி1 (Mali - G52MC1) கிராபிக்ஸ் கார்டும் இந்த Sansui 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த 50 இன்ச் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








