பார்ப்பவர்களை wow சொல்லவைக்கும் தி ஃபிரேம் 2018 சீரிஸ் டிவி மாடல்கள்.!

இந்த டிவி மாடல்கள் உலகின் சிறந்த கலை வடிவங்களை வழங்குகிறது, பின்னர் சாம்சங் ஆர்ட் ஸ்டோரில் நியூ யார்க் டைம்ஸ்-இல் இருந்து 30 வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்களை சேரத்துள்ளது.

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் தி ஃபிரேம் 2018 சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த டிவி மாடல்கள் பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

பார்ப்பவர்களை wow சொல்லவைக்கும் தி ஃபிரேம் 2018 சீரிஸ் டிவி மாடல்கள்.

தி ஃபிரேம் 2018 சீரிஸ் டிவி மாடல்கள் பொறுத்தவரை 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 800-க்கும் அதிகமான கலை வடிவங்கள் இந்த புதிய டிவி மாடல்களின் ஃபிரேம்களில் வழங்கப்பட்டுள்ளது.

 4கே யுஎச்டி:

4கே யுஎச்டி:

இந்த தி ஃபிரேம் 2018 சீரிஸ் டிவி மாடல்கள் பொறுத்தவரை 4கே யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வாடிக்கையாளர்கள் தங்களின் வைபை மற்றும் சாம்சங் அக்கவுன்ட் விவரங்களை மொபைல் போனில் இருந்து ப்ளூடூத் லோ எனெர்ஜி வழியாக பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட் ஹப்:

ஸ்மார்ட் ஹப்:

மேலும் இந்த டிவி மாடல்களில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்மார்ட் ஹப் மெனு வழங்கப்பட்டு இருக்கிறது, இதில் அனைத்து ஸ்ட்ரீமிங் சேவைகள், கன்சோல்கள் மற்றும் நேரலை டிவி உள்ளிட்டவற்றை இயக்க முடியும். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

சாம்சங் ஆர்ட் :

சாம்சங் ஆர்ட் :

இந்த டிவி மாடல்கள் உலகின் சிறந்த கலை வடிவங்களை வழங்குகிறது, பின்னர் சாம்சங் ஆர்ட் ஸ்டோரில் நியூ யார்க் டைம்ஸ்-இல் இருந்து 30 வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்களை சேரத்துள்ளது. எனவே பயனர்கள் அறையின் சூழலுக்கு ஏற்ப சிறந்த படங்களை தி ஃபிரேமில்
செட் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டன்ட்

பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டன்ட்

பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டன்ட் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவியில் சேர்க்கப்பட்டள்ளது. பின்பு மேம்படுத்தப்பட்ட யூசர் இன்டர்ஃபேஸ் மூலம் பயனர்கள் வசிக்கும் அறையின் நிறத்துக்கு ஏற்பட கேலரிக்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் :

மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் :

மேலும் டிவி பயன்படுத்தாத போது இதில் உள்ள மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் தி ஃபிரேம்-ஐ டிவியில் இருந்து கலை வடிவமாக
மாற்றிஇ அறையில் உள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.

விலை:

விலை:

தி ஃபிரேம் 2018 சீரிஸ் டிவி மாடலின் ஆரம்ப விலை 1999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,37,255) என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த டிவி மாடல்களின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsungs The Frame TV Refreshed for 2018 With Enhanced Features New Customisation Options and Artwork : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X