அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.!

கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.14,200-ஆக உள்ளது

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, தற்சமயம் கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச், கேலக்ஸி ஃபிட், போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த தொழிலநுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.!

குறிப்பாக கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வசதி கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

அதேபோன்று கேலக்ஸி ஃபிட் மற்றும் சாதனத்தை அணிந்திருப்பவர் நடப்பது, ஓடுவது, பைக்கில் செல்வது போன்ற நடவடிக்கைகளை தானாக கண்டறிந்து அதற்கான விவரங்கள் சேகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் :

சாம்சங் கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் :

சாம்சங் கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் பொதுவாக 1.1-இன்ச் 360x360 ஃபுல் கலர்AOD டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த வாட்ச் எக்ஸிநோஸ் 9110 பிராசஸர், 786எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த சாதனத்தை வாங்கும்
பயனர்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் பேட்ட ஒன்று வழங்கப்படுகிறது.

கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் சிறப்பம்சங்கள்:

கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் சிறப்பம்சங்கள்:

கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் 5ATM+ IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது, பின்பு இந்த சாதனம் MIL-STD-810G சான்று பெற்றிருப்பதால் ராணுவ தரத்திற்கு இணையான உறுதித்தன்மை கொண்டிருக்கிறது. மேலும் வியரபிள் ஒஃஎஸ் 4.0 கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக ப்ளூடூத் 4.2, வைபை,230 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.14,200-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபிட்:

சாம்சங் கேலக்ஸி ஃபிட்:

சாம்சங் கேலக்ஸி ஃபிட் சாதனம் பொதுவாக 0.95-இன்ச் ஃபுல் கலர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 120x240 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 512கே.பி ரேம் மற்றும் 32எம்பி மெமரி கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

கேலக்ஸி ஃபிட் அம்சங்கள்:

கேலக்ஸி ஃபிட் அம்சங்கள்:

கேலக்ஸி ஃபிட் சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளம், 70எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் MIL-STD 810G ராணுவ தரம் கொண்டிருக்கிறது இந்த அசத்தலான சாதனம். பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.7,108-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung’s new Galaxy Watch Active measures blood pressure : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X