சாம்சங் ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி எப்போது அறிமுகம்? என்ன ஸ்பெஷல் தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி என்ற புதிய மாடல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டலான புதிய ஸ்மார்ட் டிவியின் சிறப்பு என்வென்பதை பார்க்கலாம்.

ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி.

ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி.

ஸ்மார்ட்போன் சந்தையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதேபோல் ஸ்மார்ட் டிவிகளுக்கான சந்தையிலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. போட்டியில் வெற்றியடையப் பல புதிய முயற்சிகளை ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. அப்படியான ஒரு புதிய முயற்சி தான் சாம்சங் நிறுவனத்தின் இந்த ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி.

பெஸல்கள் இல்லாத உலகின் முதல் டிவி

பெஸல்கள் இல்லாத உலகின் முதல் டிவி

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள இந்த புதிய சாம்சங் ஜீரோ பெஸல் கியூ.எல்.ஈ.டி டிவி Q900T அல்லது Q950T என்ற மாடல் பெயர்களில் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவியில் இருக்கும் மிக முக்கியமான சிறப்பம்சம் இதில் பெஸல்கள் இல்லை என்பது தான்.

அடி தூள்., 84 நாள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் புதிய 2 ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்அடி தூள்., 84 நாள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் புதிய 2 ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்

பெஸல் என்றால் என்ன?

பெஸல் என்றால் என்ன?

உலகின் முதல் பெஸல் இல்லாத டிவியை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யப்போகிறது. முதலில் பெஸல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளலாம். டிவி, கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் டிஸ்பிளேகளில் திரையை ஒட்டியிருக்கும் கருப்பு நிற சட்டகம் தான் 'பெஸல்' என்று கூறப்படுகிறது. இந்த கருப்பு சட்டகம் இல்லாமல் தான் அடுத்து வெளியிடப்போகும் சாம்சங் ஜீரோ பெஸல் டிவி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.இ.எஸ் 2020

சி.இ.எஸ் 2020

இந்த புதிய டிவி சி.இ.எஸ் என்ற கஸ்டமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ கண்காட்சியில் அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது. சாம்சங்கின் ஜீரோ பெஸல் டிவி க்யூ.எல்.ஈ.டி டிஸ்பிளேயுடன் ஜனவரி இம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய புகைப்படங்களை திருடும் செயலிகள் (ஆப்).!கூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய புகைப்படங்களை திருடும் செயலிகள் (ஆப்).!

புதிய மாற்றத்தை ஏற்படுத்த போகும் சாம்சங் ஜீரோ பெஸல் டிவி

புதிய மாற்றத்தை ஏற்படுத்த போகும் சாம்சங் ஜீரோ பெஸல் டிவி

இந்த சாம்சங்கின் ஜீரோ பெஸல் டிவி க்யூ.எல்.ஈ.டி டிவி அறிமுகம் செய்யப்பட்ட பின் நிச்சயம் ஸ்மார்ட் டிவி சந்தையில் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முதல் ஜீரோ பெஸல் டிவியை அறிமுகம் செய்த பெருமை சாம்சங் நிறுவனத்தையே சாரும். இந்த டிவியின் மற்ற விபரங்கள் மற்றும் விலை விபரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Zero Bezel QLED TV Will Be Launched at CES 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X